சருவலோகாதிபா நமஸ்காரம் full lyrics description
Автор: Northern Pole
Загружено: 2025-01-16
Просмотров: 568
சருவலோகாதிபா நமஸ்காரம்
சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்.
திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்.
பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்.
முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்ய திரியேகா, நமஸ்காரம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: