😱உலகின் முதல் மனிதன் விரலா 😰?...
Автор: யாத்திசை_வினோ
Загружено: 2025-02-22
Просмотров: 1162
#history #trending #jarburial #burial #trekking #pudukottai #sengalur #orchealogy
செங்களூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெருங்கற்காலச் சின்னங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் இரும்புக் காலம் 2500- 2600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.
செங்களூரில் காணப்படும் பெருங்கற்காலச் சின்னங்கள் பல்வேறு வகையாக உள்ளன. இப்பெருங்கற்காலச் சின்னங்கள் செம்பராங் கல்களைக் கொண்டும், கடினமான கருங்கல்களைக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு கிடைக்கும் பெருங்கற்காலச் சின்னங்கள் கல்வட்டம், கல்குவை, கல்பதுக்கை, புதைகுழி, முதுமக்கள் தாழி, நடுகல்கள், இரண்டு கல்பதுக்கைகள் போன்றவையாகும்.
எங்களின் ஆய்வில் செவ்வக வடிவ பெருங்கற்காலச் சின்னம் கிடைத்ததை சிறப்பு வாய்ந்ததாகக் கருதுகிறோம். ஏனெனில், இதுபோன்ற சின்னம் தென்னிந்தியாவில் செங்களூர், சித்தனவாசல் ஆகிய இரு இடங்களில் மட்டும்தான் காணப்படுகிறது.
இந்தப் பெருங்கற்காலச் சின்னங்களை அமைத்த நமது மூதாதையர்களின் வாழ்விடம் இந்தச் சின்னங்களுக்கு தென்மேற்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுபோல, கல்பதுக்கைகளை அமைக்கும் முறை நமது மூதாதையர்களின் கட்டடக் கலையின் தேர்ச்சியை நமக்கு மிக தெள்ளத் தெளிவாக சித்திரிக்கிறது.
செங்களூரில் காணப்படும் கல்பதுக்கைகள் நான்கு பெரிய கல்பலகையைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்பலகைகளும் 3 முதல் 7 அடி உயரமும், 5 முதல் 7 அடிவரை அகலமும் கொண்டதாகும்.
இத்தகைய பெரிய கல்களை சிதைவின்றி பாறையிலிருந்து பிரித்தெடுக்கும் முறை மற்றும் அதனை தொலைவிலிருந்து இப்பகுதிக்கு கொண்டு வந்த நுட்பமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் வியப்படையச் செய்யும் வகையில் உள்ளது.
இதைப் போன்று கல் வட்டங்களில் பயன்படுத்தியுள்ள செம்பராங்கல்கள் பெரிய அளவில் உள்ளன. இந்தக் கல்களை குடைந்தெடுக்கவும், அதைத் தகுந்த இடத்தில் பொருத்தும் விதமும் நம் முன்னோர்கள் 2500-2600 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டடக் கலையில் வளர்ச்சி பெற்றிருந்ததை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்தப் பெருங்கற்காலச் சின்னங்களில் கருப்பு சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்பு வண்ண மட்கலன்கள் கிடைத்துள்ளன. இந்த மட்கலன்கள் பல்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளன.
இந்த வடிவங்களைக் கொண்டு அக்காலத்து மக்களின் சமுதாய பழக்க வழக்கங்களையும் அறிய முடிகிறது. கருப்பு சிவப்பு மட்கலன்கள் இரும்புக் காலத்திற்கு உரியவையாகும். இதைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. செங்களூர் அகழ்வாராய்ச்சியில் பல்வேறு வகையான இரும்பாலான கருவிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்தக் கருவிகள் அக்கால மக்களின் இரும்பு உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிவதற்கு துணைபுரிகிறது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: