திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார கள விஜயம்
Автор: DMU TRINCO
Загружено: 2025-12-05
Просмотров: 243
வெள்ளப் பெருக்கு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று (04) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார கள விஜயம் மேற்கொண்டார்.
நீலாப்பொல பகுதியில் பிரதான வீதி முற்றும் முழுதாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக மின்கம்பங்கள் செயலிழந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மின்சார இணைப்புகளை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் பெரும்பாலான பகுதிகளில் குடி நீர் விநியோகமும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை சீராக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது பொதுமக்களின் அத்தியாவசிய வசதிகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடிமக்களுடன் உரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் குறித்து அறிந்துகொண்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை விரைவுபடுத்துவதற்கான தேவையான அறிவுறுத்தல்கள், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, குடிநீர், தற்காலிக தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
District Media Unit
Trincomalee
#dmutrincomalee
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: