🛑க்ரீன் ஹார்ட்ஃபுல்னெஸ் ரன் 2025 | கொளப்பாக்கம் ஊர் தலைவர் ஏசுபாதம் | பசுமையை காக்கும் ஓட்டம்
Автор: Speak TV
Загружено: 2025-11-19
Просмотров: 33
#chennai #viral #viralshort #trending #heartfulness #green #run
க்ரீன் ஹார்ட்ஃபுல்னெஸ் ரன் 2025: ஓமேகா பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்டோர் பசுமையான எதிர்காலத்திற்காக ஒன்றுபட்டனர்
சென்னை, நவம்பர் 16, 2025
உடல் நலன், சமூக ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றின் உற்சாகமான கொண்டாட்டமாக, ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிட்யூட் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஓமேகா பிரிவு இணைந்து இன்று காலை மிகுந்த உயரிய லட்சியத்துடுடன் க்ரீன் ஹார்ட்ஃபுல்னெஸ் ரன் 2025 நிகழ்வை நடத்தியது. 1,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளியின் பசுமையான வளாகத்தில் ஒன்று கூடினர்; இந்நிகழ்வு சமூக உணர்வையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அழகாக இணைத்தது.
இந்த வருட ரன், நிறுவனம் முன்னெடுத்து வரும் மரம் வளர்ப்பு பணியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. 25,000 அழிவின் ஆபத்தில் உள்ள மரங்களை நட்டிடும் இலக்குடன், ஓட்டப்பந்தய வீரர்கள், நடைபயிற்சி செய்பவர்கள், குடும்பங்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி, உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஆண்டுகளில் 18,000-க்கும் மேற்பட்ட மரங்கள் நட்டப்பட்டுள்ளன.
இன்று உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் திரு. யேசுபாதம், பள்ளியின் தாளாளர் திரு. பாரத் மாதவன், தலைமை நிதி நிர்வாக அதிகாரி திரு. சுப்ரமணியன் வாஞ்சிநாதன் மற்றும் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு வெங்கட் லக்ஷ்மி நரசிம்மா ஆகியோரின் மதிப்புமிக்க வருகையால் நிகழ்ச்சி சிறப்பாக கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 5 கிலோமீட்டர், மூன்று கிலோமீட்டர் மற்றும் 1.5 கிமீ மகிழ்ச்சி ஓட்டங்களை தொடர்ச்சியாக நடத்தினர்.
சிறப்பான வானிலை, உற்சாகமான சூழல், பசுமை சூழ்ந்த பள்ளி வளாகத்தால் நிகழ்வு மேலும் மனநிறைவை அளித்தது.
ரன் நிறைவில், பங்கேற்பாளர்கள் அனைவரும் சுவையான காலை உணவை பகிர்ந்து கொண்டு நட்புறவை மேம்படுத்தினர். நலவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிட்யூட்டின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் சிறந்த உதாரணமாக இந்நிகழ்வு திகழ்ந்தது. எடுக்கும் ஒவ்வொரு அடியும் இந்த பூமியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு அர்த்தமுள்ள பங்காக இருக்க முடியும் என்பதை இது நிரூபித்தது.
ஊடக தொடர்புக்கு:
ஹார்ட்ஃபுல்னெஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஓமேகா பிரிவு
ஓமேகா ஸ்கூல் ரோடு, கொளப்பாக்கம், சென்னை – 600128
www.greenheartfulnessrun.com
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: