Vaa Vaa Jegadheesa (வாவா ஜெகதீசா) St.John's Church, Madathuvilai - தூய யோவான் ஆலயம், மடத்துவிளை
Автор: Antique Melodicaptures (பழைய கிறிஸ்தவ பாடல்கள்)
Загружено: 2026-01-11
Просмотров: 367
வாவா ஜெகதீசா ஒரு பழைய பாடல். இப்பாடல் "கை பிரதி" என்னும் ஒரு பாடல் புத்தகத்தில் உள்ளது. இது போன்ற பாடல்கள் இன்று அழிந்துவரும் நிலையில், நமது மடத்துவிளை தூய யோவான் ஆலய மக்கள் காலம் காலமாக பாடி வந்ததை இன்றும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். இந்த பாடல்களை கேட்கும் பொழுது, நமது முன்னோர்கள் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள்மூலம் கற்றுக்கொண்ட பாடல்கள்தான் இது போன்ற பாடல்கள். இது போன்ற பாடல்களை தெய்வ பிள்ளைகளிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்காக இந்த "Antique Melodicapture" உள்ளது. இந்த பாடல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கு பகிரவும். நன்றி!
lyrics -
வாவா ஜெகதீசா – வரந்தரவே
வாவா ஜெகதீசா – இதுசமயம்
வாவா ஜெகதீசா – உன் மகிமையை
யார் யார் யார் அறிவார்?
சரணங்கள்
1. காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய்
பூவில் கனி பாலுண்டவா, புகல் சொல்லாதே – வாவா
2. இரண்டு மூன்று பேர் கூடி தொண்டு புரியும் வேளை
அண்டையில் வருவேன் என்றீரே, அட்டி சொல்லாதே – வாவா
3. பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற்று
பற்பல பாஷைகள் பேசினார், பிரசங்கம் செய்ய – வாவா
4. கேளுங்கள் அப்பொழுது கிருபையாகக் கொடுப்பேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றீரே, தாமதமென்ன – வாவா
5. மோசே முதலாயுள்ள தீர்க்கர் முனிவருக்கும்
ஆசீர்வாதங் கொடுத்தவா அருள் புரிய – வாவா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: