எழுத்தாளர் திலீப்குமாரின் தீர்வு சிறுகதை - கதை சொல்லி மந்திரமூர்த்தி அழகு
Автор: Manthiramoorthi Alagu
Загружено: 2025-02-12
Просмотров: 414
எழுத்தாளர் திலீப்குமார் இலக்கியத் திறனாய்வாளர்; மொழிபெயர்ப்பாளர். நகர வாழ்வின் இடர்களையும், எளிய நடுத்தர வர்க்க மக்களின் சமூக, பொருளாதார சூழல், அவர்கள் சந்திக்கும் புறக்கணிப்பு, அவை ஏற்படுத்தும் உள, உறவுநிலை மாற்றங்களையும் விவேகத்துடனும், அங்கதத்துடனும் நுட்பமாகக் காட்சிப்படுத்துபவை திலீப் குமாரின் படைப்புகள். திறனாய்வாளராக அவர் தொகுத்து உருவாக்கிய தமிழின் சிறந்த சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்புகள் தமிழ் நவீன இலக்கியத்திற்கு இந்திய அளவில் ஒரு விரிந்த தளத்தை ஏற்படுத்தின. திலீப் குமார் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நவீன தமிழ் இலக்கியம் குறித்து உரைகளும், விரிவுரைகளும் ஆற்றியுள்ளார்.
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகள் ஏற்படுத்திய பாதிப்பும் தன் அனுபவ உலகத்திற்கும் இவர்கள் படைப்பில் பிரதிபலித்த உலகத்துக்கும் இருந்த மிகப் பெரிய ஒற்றுமையும் தன்னை எழுதத் தூண்டியதாகக் குறிப்பிடுகிறார்.
திலீப் குமாரின் முதல் சிறுகதை ஜெயகாந்தனின் 'ஞானரதம்' இதழில் வெளிவந்தது. தொடர்ந்து 'வம்பு', 'தீர்வு' இரு சிறுகதைகள் கணையாழியில் வெளிவந்தன. 'தீர்வு' 1977-க்கான இலக்கியச் சிந்தனை பரிசைப் பெற்றது. அவரது பல கதைகள் தமிழ்நாட்டுக்கு வியாபார நிமித்தமாக புலம் பெயர்ந்து வந்த மத்திய தர குஜராத்திகள், மராத்தியர் வாழ்க்கையைச் சித்தரித்தவை. நகரவாழ்வின் இடர்களும், எளிய மனிதர்களின் வாழ்வும் அவரது பெரும்பாலான கதைகளின் பேசுபொருள்கள். 'மூங்கில் குருத்து', 'கடவு' என்ற இரு சிறுகதைத் தொகுதிகள் க்ரியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டன. 'மூங்கில் குருத்து' சிறுகதை விட்டல் ராவ் தொகுத்த 'இந்த நூற்றாண்டு சிறுகதைகள்' தொகுப்பில் இடம்பெறுகிறது. பெங்களூருவில் உள்ள “சங்கம் ஹவுஸ்” அறக்கட்டளையின் சார்பில், ஆகஸ்ட் 2011-ல் தரங்கம்பட்டியில் நடத்தப்பட்ட எழுத்தாளர் முகாமில் (Tranquebar Project) பங்கேற்றபோது எழுதப்பட்ட குறுநாவல் ‘ரமாவும் உமாவும்’.
தீம்தரிகிட இதழில் வெளிவந்த திலீப்குமாரின் 'ஒரு குமாஸ்தாவின் கதை' பத்மா நாராயணனின் ஆங்கில மொழியாக்கத்தில் ப்ளூம்ஸ்பர்க் நிறுவனம் படைப்பிலக்கிய மாணவர்களுக்காக வெளியிட்ட பாடநூலில் (Art and Craft of Asian Stories: A Writer's Guide and Anthology) தொகுக்கப்பட்ட 24 ஆசியக் கதைகளில் ஒன்றாக இடம்பெற்றது. Caravan இதழிலும் வெளிவந்தது[1]. பல்வேறு இந்திய மொழிகளிலும் பிரெஞ்சு மொழியிலும் வெளியானது. 'அக்கிரகாரத்தில் பூனை[2]' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Leeds University Journal--ல் 2005--ல் வெளிவந்தது.
திலீப் குமாரின் 'கடவு' சிறுகதைத்தொகுப்பு மார்த்தா ஆன் செல்பி (Martha Ann Selby) யால் 'Cat in the Agraharam and other stories' என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு நார்த்வெஸ்டேர்ன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. 2021-க்கான கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் மொழியாக்கத்திற்கான விருதைப் பெற்றது. திலீப் குமாரின் சிறுகதைகள் மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
தொகுப்பு நூல்கள்
திலீப்குமார் 1999-ல் 'Contemporary Tamil Short Fiction' என்ற பெயரில் கி. ராஜநாராயணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், அம்பை, வண்ணதாசன், ஜி. நாகராஜன் உள்ளிட்ட சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஆங்கில மொழியாக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்து, (மொழியாக்கம்: வசந்தா சூர்யா) தொகுத்து வெளியிட்டார். 2004-ல் அத்தொகுப்பு 'A Place To Live' என்ற பெயரில் பெங்குவின் பதிப்பாக வெளிவந்தது.
1913 முதல் 2000 வரை பல்வேறு அழகியல் மற்றும் கருத்து நிலைகளைப் பிரதிபலித்த முன்னோடி எழுத்தாளர்களின் எண்பத்தியெட்டு(88) சிறுகதைகளை மொழிபெயர்ப்பிற்காகத் தேர்வு செய்து (மொழியாக்கம்: சுபஶ்ரீ கிருஷ்ணஸ்வாமி) தொகுத்தார். வ.வே. சுப்ரமணிய ஐயர், பாரதி போன்றவர்களுக்கு முன்பே எழுதிய அம்மணி அம்மாள், விசாலாட்சி அம்மாள், செல்வக்கேசவராய முதலியார் ஆகியோரின் சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றன. 'The Tamil Story Through the times, through the tides' என்ற பெயரில் வெளிவந்தது. இத்தொகுப்பிற்காக சுபஶ்ரீ கிருஷ்ணஸ்வாமி சாகித்ய அகாதெமியின் மொழியாக்கத்திற்கான விருதை 2018-ல் பெற்றார்.
விருதுகள்
இலக்கியச் சிந்தனை பரிசு (1977)
பாஷா பாரதி
ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் 'சாரல்'
விளக்கு விருது(2010)
சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பிற்கான விருது 'The Tamil Story : through the times; through the tides' (தொகுப்பு, பதிப்பாசிரியர்)
பரீக்ஷா ஞாநி நினைவு விருது (2020)
நூல்கள் பட்டியல்
சிறுகதைத் தொகுப்பு
மூங்கில் குருத்து (1985)
கடவு
குறுநாவல்
ரமாவும் உமாவும் (2011& 2017)
கட்டுரை
மெளனியுடன் கொஞ்ச தூரம்(1992)
மொழிபெயர்ப்பு
'வாக்' சிறுகதைகள் (1997 கதா அறக்கட்டளை)
தொகுப்பு நூல்கள்
வெங்கட் சாமிநாதன் : வாதங்களும் விவாதங்களும் (2010)
நாகலிங்க மரம் - சூடாமணி சிறுகதைகள் (2010)
Contemporary Tamil Short Fiction (1999) Reprinted as A place to live (2004, Penguin)
The Tamil Story Through the times, through the tides (2016, Westland)
மொழிபெயர்க்கப்பட்டவை
Cat in the Agraharam and Other stories translated by Dr.Martha Selby (Northwestern University press 2020)
நன்றி : தமிழ் விக்கிபீடியா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: