Pallikonda Perumal Temple | பள்ளிகொண்ட பெருமாள் கோவில் | Sri Uthra Ranganatha Perumal Swamy |
Автор: Kanikrish2021
Загружено: 2021-08-03
Просмотров: 11405
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா
ஸ்ரீ உத்திர ரங்கநாத பெருமாள் ஆலயம், பெருமாள் ஆலய தல வரலாறு...
Google Map Location : https://goo.gl/maps/sozyWxhKQjrAgzFH8
Links for our Previous Videos…
Thiruvalam Sivan Temple | திருவலம் சிவன் கோவில் | • Thiruvalam Sivan Temple | திருவலம் சிவன் க...
Virunchipuram Sivan Temple 1 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 1 | • Virinchipuram Sivan Temple 1 | விரிஞ்சிபுர...
Virunchipuram Sivan Temple 2 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 2 |
• Virinchipuram Sivan Temple 2 | விரிஞ்சிபுர...
Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் | Margabandheeswarar Temple Virunchipuram |
• Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் | Mar...
eladum Thanigai Malai| வேலாடும் தணிகை மலை|Sri Balamurugan Thirukovil|
• Veladum Thanigai Malai| வேலாடும் தணிகை மலை...
Pallikonda Perumal Temple # பள்ளிகொண்ட பெருமாள் கோவில் # ஸ்ரீ உத்திர ரங்கநாத பெருமாள் கோவில் # Sri Uthra Ranganathar Swamy Temple Pallikonda # பெருமாள் ஆலயம் # Pallikonda Perumal Temple # Lord Vishnu # Lord Balaji # Venkatesaperumal # Govinda # வேலூர் மாவட்டம் # பெருமாள் திருத்தலம் # #AalayaDharisanam # Pallikonda Temple # Pallikonda #திருக்கோவில் # Perumal Whatsap status tamil Perumal Status #Kanikrish’s Vlog
உத்திர ரங்கநாதர் கோவில் - பள்ளிகொண்டா
தென் தமிழகத்தின் ஸ்ரீரங்கம் போல, வடதமிழகத்தின் புகழ்மிக்க ஆலயமாக திகழ்வது, பாலாற்றின் ஓரம் உள்ள உத்திர ரங்கநாதர் கோவில். பிரம்மனின் யாகத்தைக் காத்தருளியவர் இந்தப் பெருமாள். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள இந்த ஆலயம், இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியதலம், ஆண்டாளை மணம் முடித்தது போல், பள்ளிகொண்டாவில் செண்பகவல்லியை மணம் புரிந்த தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக திகழ்கிறது.
புராண வரலாறு :
இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் நாரதர், பிருகு மகரிஷிக்கு இரண்டு அத்தியாயங்களாகக் கூறப்பட்டுள்ளது. காஞ்சி மகாத்மியத்திலும், ஹஸ்தகிரி மகாத்மியத்திலும் சொல்லப்பட்டுள்ளது என பள்ளிகொண்டை எனும் உத்திரரங்கஷேத்திர புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகொண்டா ரங்கநாதரைத் தரிசித்து மகிழ்ந்த பிரம்மா, யாகம் செய்ய விரும்பினார். அதற்கான இடத்தைத் தேடினார். முடிவில் வேறு இடங்களில் நூறு யாகங்கள் செய்வதைவிட, சத்யவிரத ஷேத்திரம் எனும் காஞ்சீபுரத்தில் செய்வதே சாலச் சிறந்தது என்று தீர்மானித்தார்.
இந்த நிலையில் சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் தங்களுள் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கான பஞ்சாயத்து பிரம்மாவிடம் வந்தது. பிரம்மா, லட்சுமியே உயர்ந்தவள் என்று கூறினார். கோபம் கொண்ட சரஸ்வதி அங்கிருந்து, மேற்கேயுள்ள நந்திதுர்க்க மலைக்குச் சென்றாள்.
ஆனால் காஞ்சீபுரத்தில் தான் செய்யவிருக்கும் யாகத்திற்கு, தம்பதி சமேதராய் செல்ல வேண்டும் என்பதால் சரஸ்வதியை அழைத்தார் பிரம்மா. ஆனால் அவர் உடன் வர சம்மதிக்கவில்லை.
எனவே, சாவித்திரி என்ற பெண்ணை உருவாக்கி, அவளை மணம்புரிந்து யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. இதைக் கேள்வியுற்ற சரஸ்வதி, பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து, ஷீர நதி எனும் பாலாற்றில் பாய்ந்து, யாகத்தை அழிக்க முற்பட்டாள். இதையறிந்த பிரம்மா ஸ்ரீமன் நாராயணனிடம் தஞ்சம் புகுந்தார். அவரது வேண்டுதலுக்கு செவிசாய்த்த பெருமாள், பள்ளிகொண்டா, திருப்பாற்கடல், காஞ்சீபுரம் என மூன்று இடங்களில் பாலாற்றை வழிமறித்து வெள்ளத்தைத் தடுத்து, பிரம்மாவின் யாகத்தைக் காத்தருளினார். பள்ளிகொண்டாவில் சயனம் செய்த பெருமாள், பள்ளிகொண்டான் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்.
சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் மணம் புரிந்ததுபோல, பள்ளிகொண்டாவில் சம்பாதிமுனிவர் விருப்பப்படி, செண்பகவல்லி என்ற பக்தையை பங்குனி உத்திர நாளன்று திருமால் மணம் புரிந்ததாக தல புராணம் கூறுகிறது.
கல்வெட்டுகள் :
1925-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல்துறை ஆய்வறிக்கையின்படி, இத் தலத்தை பற்றிய 22 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 18 கல்வெட்டுகள் உத்திர ரங்கநாதர் ஆலயத்திலும், மூன்று கல்வெட்டுகள் நாகநாதீஸ்வரர் கோவிலிலும், ஒரு கல்வெட்டு செல்லியம்மன் கோவிலிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டுகள் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.848), முதலாம் பராந்தகன் (கி.பி.926), முதலாம் ராஜராஜன் (கி.பி. 985), முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), இரண்டாம் ஜடாவர்மவீரப் பாண்டியன் (கி.பி.1306), குலசேகரசம்புவராயன் (கி.பி.1307) போன்ற மன்னர்களின் கொடைகளையும், நிலதானங்களையும் எடுத்துரைக்கிறது.
பிரம்மஹத்தி தோஷம் :
திரேதாயுகத்தில் தேவேந்திரன் தன் மனைவி இந்திராணியோடு வனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது கிளி வடிவில் கூடியிருந்த ரிஷிகளை கொன்றான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் வேண்டி நின்ற இந்திரன், காச்சயப்ப முனிவர் அறிவுரைப்படி, பள்ளிகொண்டா தலத்து வியாச புஷ்கரணியில் நீராடி, ஓராண்டு காலம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதரைத் தரிசித்து, தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.
பரிகாரத் தலம் :
இத்தலம் பதினாறு வகை செல்வங்களையும் அள்ளித் தரும் தலமாகப் போற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமணப்பேறு வழங்கும் தலமாக திகழ்வதால், இங்கே திருமண வைபவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நீண்டகாலம் திருமணம் தடைபட்டவர்கள், இங்கு வந்து வேண்டிசென்றால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
தலமரம் பாதிரி மற்றும் பாரிஜாதம் ஆகும். தல தீர்த்தமாக வியாசர் புஷ்கரணி எனும் திருக்குளம் உள்ளது. ஆலயத்தின் அருகே ஓடும் நதி ‘ஷீரநதி’ அல்லது ‘பத்மினி’ எனும் பாலாறாகும். இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: