வேல்கொண்ட அம்பாள் விண்ணொளியில் கண்டேன்!
Автор: அருள்செல்வனின் செவிச்செல்வம்
Загружено: 2025-12-11
Просмотров: 281
சைவ சமயம் எடுத்தியம்பும் இறைவனின் நிலைகள் இரண்டு. அவை
1.சொரூப நிலை
2.தடத்த நிலை
தடத்த நிலை மேலும் மூன்று நிலைகளாகப் பிரிகிறது. அவை
2 (அ) அருவம்
(ஆ) அருவுருவம்
(இ) உருவம்
இவற்றில் தடத்த நிலை என்பது புத்திக்கு அகப்படும் நிலை.
சொரூபம் எனும் இறைவனின் நிலை புத்திக்கு அப்பாற்பட்ட நிலை. உண்மையில் இறைவன் சொரூப நிலையில்தான் விளங்குகிறான். இந்த தத்துவத்தை உள்ளார்ந்து உணர்வில் உணர்ந்தவர்களுக்கே மனக்கவலை அகலும் என்கிறது திருவள்ளுவம்
உ
வேல்கொண்ட அம்பாள் விண்ணொளியில் கண்டேன்!
பால்கொண்ட பெண்போல் பிறைசூடி நின்றாள்!
நூல்கொண்ட குறளின் பொருள் காணச் செய்தாள்!
வால்கொண்ட வானரமாய் அலைகின்ற மனதை,
மால்கொண்ட திருமேனி நிலைக்கின்ற குணத்தில்,
பால்கடல் உருமாறி சுவைக்கின்ற தினத்தில்,
நாள்தோறும் நெஞ்சில் நிலைக்காண வைத்தாள்!
ஆள்கின்ற முருகன் கலைக்காண நினைந்தும்,
பால்தெளி தேன்கொள்ளும் கணபதியை மனதில்,
சூல்கொள்ளச் செய்தும், சுயம்பாக விளைந்த,
கால்காண முடியா சிவலிங்கம் எல்லாம்
தாள்கொண்டு நிற்கும் தாமாகிப் போனாள்!!
தோள்கொண்டு நிற்கும் சிவன் திருமார்பில்,
நீள்முடி கொண்டு சாய்கின்ற உமையவள்,
மேல்கொண்டு உணர்த்திய பொருள் ஒன்று உண்டு,
நாள்தோறும் தேடி உணர்ந்தாலும் கூட,
நூல் எல்லாம் ஓதி முடித்தாலும் கூட,
நீள் பிறவி வாடி நீண்டாலும் கூட,
மால் அயன் அம்பிகை கணபதி முருகன் சிவன்
போலன்றி தனக்குவமை இலான் என்றுரைத்தாள்!!!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: