Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

வாழும் காலத்தில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய வைகல் வைகல் நாதர் கோயில் | முடக்கு தோஷம் நிவர்த்தி தலம்

Автор: ஆன்மீகத்துடன் நட்பு

Загружено: 2024-10-10

Просмотров: 97843

Описание:

#தேவாரப்பாடல்_பெற்ற_சிவாலயங்கள்
#வைகல்_நாதர்_கோயில்
#வைகல்மாடக்கோயில்
#திருவைகல்(96/274)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 96 வது தேவாரத்தலம் திருவைகல்.

மூலவர்: வைகல்நாதர் (செண்பகாரண்யேஸ்வரர்)
அம்பாள்: கொம்பியல்கோதை
தலவிருட்சம் : செண்பக மரம்
தீர்த்தம்: செண்பக தீர்த்தம்
புராண பெயர்: வைகல்மாடக்கோயில்
தற்போதைய பெயர்: திருவைகல்
மாவட்டம்: மயிலாடுதுறை

#கோவிலமைப்பு

இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார், அம்பாள் கொம்பியல்கோதை, சாகா கோமளவல்லி, வைகல் நாயகி, தலவிருட்சம் செண்பக மரம், தீர்த்தம் செண்பக தீர்த்தம், இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது. மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது. இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன, வள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு, காலபைரவரர், கஜலட்சுமி ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் உள்ளன. காகவாகனர் சனீஸ்வரருக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. வைகல் என்ற ஊரில் கட்டப்பட்ட மாடக்கோயிலாக விளங்குவதால் வைகல் மாடக்கோயில் ஆனது. இவ்வூரில் சிவனது மூன்று கண்ணைப்போல் மூன்று கோயில் உள்ளன. வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி சமேத பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும்.

#தலவரலாறு

தன் குட்டியை தேடி வருந்திய யானை, தனது தந்தத்தால் இங்கிருந்த ஈசல் புற்றை காலால் மிதித்து சேதப்படுத்தியது. தன் புற்றிணை மிதித்து அழித்த யானையின் உடலை ஈசல் கடித்து கொன்றன. தங்கள் தவறை உணர்ந்த யானைக்குட்டியும், ஈசலும் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றன என புராணம் கூறுகிறது. முன்னொரு காலத்தில் பூமி தேவி, தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள். இவளது வேண்டுகோளை ஏற்ற பெருமாள் பூமிதேவியை திருமணம் செய்து கொண்டார். இதனால் மகாலட்சுமிக்கு பெருமாள் மீதுகோபம் ஏற்பட்டது. எனவே லட்சுமி தேவி செண்பகவனம் எனும் இத்தலத்தை அடைந்து கடும் தவம் செய்தாள். பெருமாளும், பூமி தேவியும் பிரிந்து போன லட்சுமியை காண இத்தலம் வந்தனர். இவர்களை தேடி வந்த பிரம்மனும் இத்தல இறைவனை வழிபட்டார். சிவனின் திருவருளால் பெருமாள் லட்சுமி, பூமாதேவி இருவரையும் மனைவியராகப்பெற்றார். தேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயமும், இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும் அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபடப் பெற்ற பெருமைக்குரியதாக திகழ்கின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடல்கள் பாடியுள்ளனர்.

#பொது_தகவல்

மூன்று கோயில்கள் உள்ளன இத்தலத்தில்

விஸ்வநாதர் ஆலயம் - திருமால் வழிபட்ட கோயில் , ஊரின் தென்பால் உள்ளது , வளநகர் என்றழைக்கப்படுகிறது

பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் - பிரம்மன் வழிபட்ட கோயில் , மிகச்சிறப்புடன் திகழ்கிறது

வைகல்நாதர் ஆலயம் - மாடக்கோயில். லக்ஷ்மிதேவி அகத்தியர் வழிபட்ட கோயில் , தேவார பாடல் பெற்ற தலம் இதுவே ஆகும்.

கோயில் Google Map link

வைகல் மாடகோயில் வைகல் நாதர் கோயில் (சிவபெருமானின் நெற்றிக் கண்ணாக உள்ள தலம்)
https://maps.app.goo.gl/4JdCG2znBotze...

வைகல் விஸ்வநாதர் கோயில் (சிவபெருமானின் வலது கண்ணாக உள்ள தலம்)
https://maps.app.goo.gl/uhKqu5YV8NLyA...

வைகல் பிரம்மபுரீஸ்வரர் கோயில் (சிவபெருமானின் இடது கண்ணாக உள்ள தலம்)
https://maps.app.goo.gl/8XT1cNFw6fSx1...

அமைவிடம்

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை தாண்டி , பழியஞ்சிய நல்லூரை அடைந்து , அங்கிருந்து சுமார் 2 கிமீ சென்றால் இச்சிவத்தலத்தை அடையலாம் . திருநல்லம் என்கிற கோனேரி ராஜபுரத்தில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்.

கும்பகோணத்திலிருந்து (18 கி.மீ.) காரைக்கால் செல்லும் பேருந்தில் பயணம் செய்து பழிஞ்சநல்லூர் குட்டக்கரையில் இறங்கி அங்கிருந்து தெற்கே ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. திருநீலக்குடி மற்றும் கோனேரிராஜபுரத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்

+91 9443996256

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

+91 7994347966

if you want to support us via Google pay phone pay paytm

9655896987

Join Our Channel WhatsApp Group

https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...

Join this channel to get access to perks:

   / @thiruvallaradharani  

தமிழ்

வாழும் காலத்தில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய வைகல் வைகல் நாதர் கோயில் | முடக்கு தோஷம் நிவர்த்தி தலம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

சனிபகவான் தினமும் வழிபடும் ஆதிகுடி அங்குரேஸ்வரர் கோயில் உடல் குறைபாடுகள் நீங்க வழிபட வேண்டிய தலம்

சனிபகவான் தினமும் வழிபடும் ஆதிகுடி அங்குரேஸ்வரர் கோயில் உடல் குறைபாடுகள் நீங்க வழிபட வேண்டிய தலம்

🙏 மனசு நெறஞ்ச பயணம் | Just ₹499 | One day NBS Travels Kumbakonam Navagraha temple tour

🙏 மனசு நெறஞ்ச பயணம் | Just ₹499 | One day NBS Travels Kumbakonam Navagraha temple tour

நடுக்காட்டில் மழை நீரை மட்டுமே நம்பி வாழும் குடும்பம் | 70 வருசமா மின்சாரம் இல்லை |

நடுக்காட்டில் மழை நீரை மட்டுமே நம்பி வாழும் குடும்பம் | 70 வருசமா மின்சாரம் இல்லை |

திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில் |வளமான வாழ்வு தரும் வடுக பைரவர் |3 கோடி மந்திரங்கள் வழிபட்ட தலம்

திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில் |வளமான வாழ்வு தரும் வடுக பைரவர் |3 கோடி மந்திரங்கள் வழிபட்ட தலம்

பல்லவர்காலத்து தமிழ் கல்வெட்டு  | வாய்பிளக்க வைத்த வல்லம் ரகசியம்  | #vallam #kudaivarai #temple

பல்லவர்காலத்து தமிழ் கல்வெட்டு | வாய்பிளக்க வைத்த வல்லம் ரகசியம் | #vallam #kudaivarai #temple

திருவதிகை  வீரட்டானேஸ்வர்ர் கோவில்

திருவதிகை வீரட்டானேஸ்வர்ர் கோவில்

தமிழ்நாட்டின் கோவில் மாநகரம் | Exploring Kumbakonam & Surroundings #kumbakonam #tamil #tamilnadu

தமிழ்நாட்டின் கோவில் மாநகரம் | Exploring Kumbakonam & Surroundings #kumbakonam #tamil #tamilnadu

Потерянную могилу Клеопатры нашли, заглянув внутрь учёные закричали от yжaca…

Потерянную могилу Клеопатры нашли, заглянув внутрь учёные закричали от yжaca…

யார் தலைவன்? நடிகனா? போர் வீரனா? சீமான் முன் அதிரடி காட்டிய சாட்டை துரைமுருகன்! Saattai Duraimurugan

யார் தலைவன்? நடிகனா? போர் வீரனா? சீமான் முன் அதிரடி காட்டிய சாட்டை துரைமுருகன்! Saattai Duraimurugan

வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய பெருமாள் கோயில் , சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் , உத்திரமேரூர்

வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய பெருமாள் கோயில் , சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் , உத்திரமேரூர்

எதிரியின் பலத்தை தூள் தூளாக்கும் வாலி வழிபட்ட வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் | தமிழகம் மறந்த அற்புத கோயில்

எதிரியின் பலத்தை தூள் தூளாக்கும் வாலி வழிபட்ட வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் | தமிழகம் மறந்த அற்புத கோயில்

சனி தோஷ பரிகார ஸ்தலம்

சனி தோஷ பரிகார ஸ்தலம் "மங்கள சனீஸ்வரர்"Agastheeswar temple.| Chennai |Ammashagasraa travelvlog

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் | திருமண தடை நீக்கும் தலம் | ஆயிரத்தில் ஒருவனாக வந்த சிவன்

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் | திருமண தடை நீக்கும் தலம் | ஆயிரத்தில் ஒருவனாக வந்த சிவன்

சிவன் நினைத்தால் மட்டுமே நீங்கள் இந்த கோவிலுக்கு வரமுடியும் | Thirukollampudur | Vilvaraneswarar

சிவன் நினைத்தால் மட்டுமே நீங்கள் இந்த கோவிலுக்கு வரமுடியும் | Thirukollampudur | Vilvaraneswarar

💥இவங்க தாத்தா பாட்டி இங்கே பிறந்தவர்களாம் 🥰|வேர்களைதேடி மூலம்வந்த அயலக மாணவர்கள்|NRIsTamilnadu visit

💥இவங்க தாத்தா பாட்டி இங்கே பிறந்தவர்களாம் 🥰|வேர்களைதேடி மூலம்வந்த அயலக மாணவர்கள்|NRIsTamilnadu visit

சுக்ர தோஷமும் பரிகாரமும் ஸ்ரீரங்கம் ஸ்தலமும்   SUKRAN DHOSHAM & PARIHARAM Srirangam Sthalam

சுக்ர தோஷமும் பரிகாரமும் ஸ்ரீரங்கம் ஸ்தலமும் SUKRAN DHOSHAM & PARIHARAM Srirangam Sthalam

நம் பாதம் ஒரு முறை இங்கு பட்டாலும் பாவங்களும் தோஷங்களும் விலகும் | திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோயில்

நம் பாதம் ஒரு முறை இங்கு பட்டாலும் பாவங்களும் தோஷங்களும் விலகும் | திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோயில்

இந்த முருகன் கோவில் வேதாளம் நீங்கள் கேட்டதை கொடுக்கும் Murugan Temple Kanthaswamy temple, Cheyyur

இந்த முருகன் கோவில் வேதாளம் நீங்கள் கேட்டதை கொடுக்கும் Murugan Temple Kanthaswamy temple, Cheyyur

மதுரையின் பழைமையான சித்தர் ஜீவா சமாதி | Maduravaasi

மதுரையின் பழைமையான சித்தர் ஜீவா சமாதி | Maduravaasi

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]