திவ்யப் பிரபந்தம் - நெய்க் குடத்தைப்...
Автор: இல்லந்தோறும் அருளமுத மழை
Загружено: 2021-01-16
Просмотров: 12134
பெரியாழ்வார் அருளிய பெரியாழ்வார் திருமொழி
ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி
பாடியவர் - திருமதி கல்யாணி சுந்தரேசன்
(தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல். )
நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின்
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே.
நெய் குடத்தில் ஏறும் எறும்புகள்போல் என்னைக் கைப்பற்றிக் கொண்ட நோய்களே பிழைத்து ஓடிச் செல்லுங்கள். என் உடலில் நாராயணன் தன் பாம்பணையோடு குடிவந்து விட்டான். முன்பு போல கிடையாது. இந்த உடல் பட்டினம் அளவுக்கு காவல் உடையது பத்திரமானது என்கிறார். பெரியாழ்வாரின் இப்படிப்பட்ட பாசுரங்கள் எல்லாம் மகோன்னதம் வாய்ந்தவை. சதாசர்வ காலமும் நான் திருவெட்டு எழுத்துக்களை உடைய அந்த நாராயண நாமத்தை உள்வாங்கிக் கொண்டே இருக்கிறேன் என்கிறார் ஆழ்வார். எங்கேயும் எப்போதும் மாலவனின் பெருமைகளை பேசியபடியே இருக்கிறேன். வாழ்ந்து வருகிறேன்.
எனவே என்னுள் அந்த பரந்தாமன் அதுவும் எப்படிப்பட்டவன் தெரியுமா? பாற்கடலின் பையத் துயின்ற பரமனடி பாடி என்கிறாளே ஆண்டாள் நாச்சியார். அதுபோல பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்கிறவன் தற்போது என்னுள் வந்து தங்கியிருக்கிறான். அதனால் என்னுள் குடிகொண்டிருக்கிற நோய்களே தப்பித்தோம் பிழைத்தோம் என்ற நிலையில் என்னை விட்டு ஓடிப் போய் விடுங்கள் என்று நோய்களை எச்சரிக்கிறார் பெரியாழ்வார். நோய் என்பது மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கக்கூடியது. அதற்கொரு எடுத்துக்காட்டாக உவமை சொல்கிறார் பாருங்கள்.
நெய்க் குடத்தைப் பற்றியேறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்
என்கிறார்! அப்படி என்றால் என்ன அர்த்தம்?
நெய் குடத்தில் சாரை சாரையாக எறும்புகள் வந்து ஆக்கிரமிக்கும். அதுபோல இந்த உடலில் ஏகப்பட்ட நோய்கள் வந்து ஏகப்பட்ட பிரச்னைகளை செய்து கொண்டிருக்கும். அதுவும் சாதாரணமான குடம் இல்லை நெய்க்குடம். ஆனால், நேற்று வரை இருந்த நிலைமை வேறு இன்றைய நிலவரம் வேறு! தற்போது என்னுள் வேதப்பிரானார் வந்து புகுந்து விட்டார். வேதப்பிரானார் என்றால் யார்? நான்கு வேதங்களுக்கும் அதிபதியான சாட்சாத் பரந்தாமன் தான்.
அவனே என்னுள் இருந்து என்னைக் காவல் காக்கிற போது நோய்களே உங்களுக்கு இங்கே என்ன வேலை சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய் விடுங்கள் என்று நோய்களை எச்சரிக்கிறார் பெரியாழ்வார். இறைவன் தானே விரும்பி வந்து ஆழ்வாருடைய உள்ளத்திற் புகுந்து நின்றான்.
அதனால் தன் திருமேனி பகவானுக்கு திருப்பள்ளி ஆயிற்று என்று உணர்ந்த பெரியாழ்வார் இதை அப்படியே தன் அடியார்களுக்கு சொல்லும்விதமாக பாசுரத்தைப் படைத்திருக்கிறார்.
-------------------------------------------------------
உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே.
எம்மிடம் சேர்ந்து எம்மை வருத்துகின்ற நோய்களே, நோய்க் கிருமிகளே, உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். ஆநிரைகளை ( பசுக்களை) மேய்க்கும் பெருமான் ( ஸ்ரீ கிருஷ்ணர்) என்னை , இந்த உடலை காத்துக் கொண்டிருக்கிறார். இதற்குள் நுழையாதீர்கள். உங்கள் வினை உங்களை இங்கு நிறுத்தியுள்ளது. அதனால் கேட்காமல் (விலகாமல்) இருக்கிறீர்கள். கடைசியாக நீங்கள் பிழைத்துக் கொள்வதற்காக , உறுதியாக சொல்கிறேன். உங்களுக்கு தேவையானது இங்கே ஒன்றும் இல்லை. நீங்கள் பற்று வைப்பதற்கு ஏதும் இல்லை. முன் போல் என்னை எளிதாகத் தாக்க முடியாது. ஏனெனில் இந்த உடல் பரந்தாமனின் காவலில் உள்ளது.
இப்பாசுரங்களை ஒருமித்த மனதுடன் படிக்க பிணிகள் அகலும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: