Aayar Seriar Sabdam - ஆயர் சேரியர் - பரதநாட்டிய சப்தம் - ராகமாலிகா, தாளம்-மிஸ்ரசாபு
Автор: चैत्ररथं
Загружено: 2025-08-31
Просмотров: 180
#BharatanatyaSabdam #Aayar #Bharatanatyam
ஆயர் சேரியர் என்னும் பக்திரசம் மிகுந்த ஒரு பரதநாட்டிய சப்தம். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சிறுவயது லீலைகளை நயமாக வருணிக்கும் இப்பாடல் ஸ்ரீகிருஷ்ணரின் மாயா முரளி மற்றும் மோகன சுவை இவற்றை மையமாக கொண்டு அவரது அழகையும் இசையையும், பக்தர்களின் மனதை ஈர்க்கும் தன்மையையும் புகழ்கிறது. ஸ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்கும் போது ஆயர்கள், தாய், தந்தையர் மற்றும் சுற்றியுள்ள அனைவரும் தங்களை மெய்மறந்து போகிறார்கள் கோபிகைகள் அவரின் இசையில் ஆழ்ந்து தங்கள் வேலைகளை மறந்து பரவசம் அடைந்து நிற்கிறார்கள். மான் குருவி போன்ற இயற்கை உயிர்களும் கூட இசையில் மயங்கி நிற்கின்றன. அவரது சிறு விரல்கள் செங்கமல கண்கள், சுருண்ட கூந்தல், பவளவாய் ஆகியவை அழகாக வர்ணிக்கப்படுகின்றன.
🎶 ஆயர் சேரியர் அறிந்திடாமலும்
(Rāgam: Rāgamalika Tāḷam: Miśra Chāpu)
ஆயர் சேரியர் அறிந்திடாமலும்
அன்னை தந்தையர் தெறிந்திடாமலும்
நேயர் கோபியர் நெஞ்சம் கவர்ந்திட
மாயவன் குழல் ஊதுறான்
எங்கள் யாதவன் குழல் ஊதுறான்
சுருண்டிருந்த அக்குழல்கள் அசைந்திட
சுந்தர முகம் துலங்கிட
மருண்ட மானினம் மேக்கை மறந்திட
மாயவன் குழல் ஊதுறான்
பவழ வாயன் குழல் ஊதுறான்
சிறு விரல்கள் அக்குழலைத் தழுவிட
செங்கமல கண் சாய்ந்திட
குருவியர்வாய் அப்புருவம் நெருங்கிட
கோபாலன் குழல் ஊதுறான்
எங்கள் பாலன் குழல் ஊதுறான்
கோவிந்தன் குழல் கீத நாதமும்
கோபியர் செவி சாய்ந்திட
மோகம்கொண்டோடி வேகமாய் வர
கண்ணனைத் தியானம் செய்கின்றார்
கமலக் கண்ணனைத் தியானம் செய்கின்றார்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: