பனி விழும் இரவு | Muthulakshmi Ragavan | Tamil audio novels | tamil novels audiobooks | MR novels
Автор: VISHNU TAMIL NOVELS AUDIO BOOKS
Загружено: 2025-08-13
Просмотров: 31802
• பனி விழும் இரவு | Muthulakshmi Ragavan | T...
முத்துலட்சுமி ராகவனின், "பனி விழும் இரவு" RJ ஜோதி விஜயன் குரலில்...
மூர்த்தி பெண்களிடம் அதிகமாக பேச மாட்டான்.. தவிர்க்க முடியாமல் பேசும் நேரங்களில் எதிரியை முறைப்பதைப் போல முறைத்தபடி அவன் பேசும் பேச்சில் பயந்து போகும் பெண்குலம் ஒரு மணி நேரத்துக்கு நீடிக்க வேண்டிய அதி முக்கிய உரையாடலைக்கூட ஒரிரு வார்த்தைகளில் முடித்துக் கொண்டு தலை மறைவாகி தப்பித்து விடும்... கல் போன்ற கடின முகமும்.. இடுங்கிய கண்களும், கோபப் பார்வையுமாக இருப்பவனிடம் மனுஷி பேசுவளா என்று தமக்குள் பேசிக் கொள்வார்கள்...
பகலிலேயே பெண்களிடமிருந்து பத்தடி தள்ளி நிற்பவன் நள்ளிரவைத் தொடும் அகால வேளையில் தனித்து நிற்கும் பெண்ணிடம் பேசி விடுவானா என்ன..?
'இவள் யாராயிருந்தால் எனக்கென்ன..? கொடைக்கானலுக்கு மிட்நைட்டில் வருகிறவ எப்படிப்பட்டவளா இருப்பா..?'
எரிச்சலுடன் கடந்து செல்ல முயன்றான்.. அவனது நினைவு தவறு என்பதைப் போல அவள் மருண்ட விழிகளுடன் அவனைப் பார்த்தாள்.. காட்டன் புடவையும், நீண்ட பின்னலும், கண்ணியமாக அவள் உடையுடுத்தியிருந்த நேர்த்தியும், தூண்டில் போடாத இறைஞ்சலுடன் கூடிய பார்வையும் அவனுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்தின..
'ச்சை..! இதென்ன பெருந்தொல்லை..!'
அவனுக்கு வெறுப்பாக இருந்தது.. அவள் மீதான இரக்கம் அவன் கால்களைத் தடை போட்டதில் அவன் கோபம் கொண்டான்.. கொடைக்கானலில் பிறந்து வளர்ந்தவனுக்கு கொடைக்கானலின் குளிர் இரவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நன்கு தெரியும்.. அது மலைவாசஸ்தலம்..! பனி பொழியும் குளிர் பிரதேசம்..! வீடுகளைவிட ரிசார்ட்டுகளும் ஸ்டார் ஹோட்டல்களும் இருக்கும் ஊர்.. உள்ளூர்வாசிகளை விட சுற்றுலா வரும் வெளியூர்காரர்கள்தான் அங்கே அதிகமாக நடமாடுவார்கள்.. மதுவின் போதையோடு இரவில் ஊரைச் சுற்றும் கயவர்களின் கண்களில் அவள் பட்டு விட்டால் என்ன ஆகும் என்பதுகூடத் தெரியாத சிறு பிள்ளையா இவள் என்று பல்லைக் கடித்தான்..
#tamilnovelsaudiobooks
#tamilaudionovels
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrannovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#rcnovelsaudio
#ramanichandrantamilnovels
#lovestorytamil
#audiobook
#audionovels
#audionovelsintamil
#newtamilnovels
#love
#lovestorytamil
#tamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: