Kaalathal aliyatha Maaveerar Kallarai - Maaveerar song | காலத்தால் அழியாத மாவீரர் - மாவீரர் பாடல்
Автор: Eelam Library
Загружено: 2020-11-29
Просмотров: 101950
காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை
கல்லறை அல்ல
உயிர் உள்ளவர் பாசறை (காலத்தால்)
தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை
தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை (தீபங்கள்) (காலத்தால்)
குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்
நின்று போர்களம் பார்த்தவன்
உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்
நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் குண்டுமழை காலத்தால்
இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர்
இள்வேனில் நாளில் உதிர்ந்தார்
தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து
மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால்
மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை
மண்ணாய் நிலைக்குமையா
ஆற்றல் மிகுந்த மாவிரர் கல்லறை மண்ணில்
அனலே முளைக்குமையா மாற்றார் காலத்தால்
தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர்
நடந்த கால் தடமிருக்கும்
தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்
அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும் தமிழீழ காலத்தால்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: