21ஆம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு கிராமம்
Автор: Erode saba
Загружено: 2023-10-08
Просмотров: 409
கொடைக்கானலின் கடைக்கோடி கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைகிராம மக்கள் குறித்த சிறப்ப செய்தி தொகுப்பை காணலாம்....
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது, இங்கு ஏராளமான மலை கிராமங்கள் உள்ளது, இந்த கிராமங்ளில் பழங்குடியினர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடைக்கானலை சுற்றி விவசாயமும் செய்து வருகிறார்கள்.... இந்த நிலையில் தான் கொடைக்கானலில் கடைகோடி கிராமமாக உள்ள மூங்கில் பள்ளம், மஞ்சம்பட்டி என்ற கிராமங்கள் இருந்து வருகிறது... கொடைக்கானலில் இருந்து மன்னவனூர் வழியாக கேரளா மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதிகள்தான் இந்த மஞ்சம்பட்டி மற்றும் மூங்கில் பள்ளம் என்ற கிராமம் கொடைக்கானலில் இருந்து மன்னவனூர் வரை வாகனங்களில் சென்றாலும் அங்கிருந்து நடைபயணமாக தான் இக்கிராமங்களுக்கு செல்ல முடியும், நடைப்பயணம் என்றாலும் அவ்வளவு எளிதாக கிராமங்களுக்கு செல்ல முடியாது... வனப்பகுதிகளுக்கு நடுவே உள்ள மலைகளைக் கடந்து வனவிலங்குகளை கடந்துதான் முதலில் மூங்கில் பள்ளம் செல்ல முடியும், அதுவும் ஒருசில பகுதிகளில் பாறைகளில் அடித்த ஏணிதான் பாதையாக இருக்கிறது... 6 மணி நேர நடை பயணத்திற்கு பின்பு மூங்கில் பள்ளத்தை சென்றடையலாம், அவ்வாறு சென்று அடைந்தாலும், நாம் வாழும் வாழ்க்கைக்கும், இக்கிராமத்தில் வாழும் மக்கள் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.... பாறைகளுக்கு நடுவே வாழ்ந்து வரக்கூடிய மூங்கில் பள்ளம் மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட அரைநாள் நடைபயணமாகதான் வந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்...
மின்சாரம் இணையதளம் என்று நாம் இருந்து வரக்கூடிய நிலையில் மின்சாரமும் இணையதளமும் இன்னும் எட்டாக்கனியாகத்தான் உள்ளது... மூங்கில் பள்ளத்திலிருந்து 2 மணி நேரம் நடந்தால்தான் மஞ்சம்பட்டி என்ற கிராமம் வரும், இந்த மஞ்சம்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது... இயற்கையின் கொடையில் அமைந்துள்ள இந்த மஞ்சம்பட்டி கிராமத்தில் மலை காய்கறிகளும், தரை காய்கறிகளும் இரண்டும் விளையக்கூடிய பகுதியாகும் விவசாயத்தில் செழித்து இருந்தாலும், விளையக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்த முடிவதில் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகின்றனர்... மஞ்சம்பட்டி கிராம மக்கள் மஞ்சம்பட்டியில் இருந்து 2 மணி நேரம் ஆற்றுப்படுகையை கடந்து பிக்கப் வேன் மூலம் தங்களுடைய விளை பொருட்களை உடுமலைப்பேட்டையில் சந்தைபடுத்துகின்றனர்...
இந்த கடைக்கோடி கிராமத்தில் சாலைவசதியோ மின்சார வசதியோ அடிப்படை தேவைகளோ இல்லாமல் சிரமப்படக்கூடிய மக்களுக்கு தமிழக அரசு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது...
மிகவேகமாக வளர்ந்து வரும் இந்த அறிவியல் நூற்றாண்டில், முடிந்த அளவிற்கு அறிவியல் பாதைகள் கடைக்கோடி கிராமங்களுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளது என்பதே நிதர்சனம்....
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: