srirangam vedupari 2025 |ஸ்ரீரங்கம் வேடுபறி |srirangam ra pathu day 8 |ஸ்ரீரங்கம் ராப்பத்து |Trichy
Автор: Trichy Diary
Загружено: 2025-01-17
Просмотров: 12174
#srirangam
#balaji
#hindutemple
திருச்சி : 17.01.2025
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா ராப்பத்து எட்டாம் திருநாள் உற்சவம் - நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் வைபவம் -பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி கோஷமிட்டுவார் தரிசனம்
ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது முக்கிய நிகழ்ச்சியான பரம்பரை வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற்றது அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இராபத்து உற்சவத்தின் 8ஆம் திருநாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவில் 4ஆம் பிரகாரத்தில் இருக்கும் மணல்வெளியில் வையாளி கண்டறளினார்...
தங்க குதிரை வாகனத்தில் இருந்த நம்பெருமாள் ஸ்ரீபாதம் தாங்குவோர் கம்பீர நடையாகவும், நாலாபுறமும் சுத்தி சுத்தி ஓடுவார்கள் அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி கோசமிட்டு வணங்கி வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து வேடுபறி உற்சவம் நடைபெறும்
திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், பெருமாள் தொண்டு தொடர வழிப் பறியில் ஈடுபட்டார். இவரை தடுத்தாட் கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக் காட்டி, பின்னர் அவரது காதில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை உபதேசித்து ஆட்கொண்ட விதம் வேடுபறி உற்சவமாக பக்தர்களின் முன்னிலையில் நடத்திக் காண்பிக்கப்படும்.
வேடுபறி உற்சவத்துக்கென நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் ஆரியபடாள் வாயில் வழியே மணல் வெளிக்கு வந்து விடுவதால், ராப் பத்து உற்சவத்தில் வேடுபறியன்று மட்டும் பரமபதவாசல் திறப்பு கிடையாது.
நாளை மறுதினம் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் 20ஆம் தேதி காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறுகிறது...
srirangam vedupari 2025 |ஸ்ரீரங்கம் வேடுபறி |srirangam ra pathu day 8 |ஸ்ரீரங்கம் ராப்பத்து |Trichy
srirangam vaikunta ekadasi
srirangam sorgavasal thirappu
srirangam ra pathu day 5
శ్రీరంగం ర పాతు రోజు 5
srirangam vaikunta ekadasi sorgavasal thirappu
శ్రీరంగం వైకుంట ఏకాదశి సొర్గవసల్ తిరప్పు
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: