ஸ்ரீ கருட தண்டகம் - தமிழில் | ஸ்ரீ வேதாந்த தேசிகர் | Garuda Dandakam | Tamil | Sri Vedantha Desikar
Автор: PSDPrasad Music
Загружено: 2021-05-28
Просмотров: 253479
ஓம் நமோ நாராயணாய !
ஸ்ரீ கருட தண்டகம் என்னும் இந்த சக்திவாய்ந்த ஸ்தோத்திரம், ஸ்ரீ வேதாந்த தேசிகரால் இயற்றப்பட்டது. சமஸ்கிருத மொழி இலக்கணத்தில் கடினமான "தண்டகம்" என்னும் நடையில் அமைந்துள்ளது. இது ஸ்ரீ தேசிகரின் கவித்திறனுக்கும், மொழி ஆளுமைக்கும் சான்றாக அமைந்துள்ளதோடு, ஸ்ரீ கருட பகவானின் நேரடி ஆசி பெற்ற மந்திரமாகவும் விளங்குகிறது.
தொற்று நோய் காலத்தில், இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை துதிப்பதால், சகல நன்மைகளும் உண்டாகும் என ஜோதிடர்கள் பரிகாரமாக சொல்லக்கேட்கிறோம். மிகவும் பெருமை மிக்க இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின், தமிழ் மொழியாக்கம், படிப்போர்க்கு பொருள் உணர்ந்துகொள்ள உதவும் வழியாக செய்யப்பட்டுள்ளது. இந்த மொழியாக்கத்தில் "தண்டக" இலக்கணம் போன்றவை கருதப்படவில்லை என்பதை அறியவும். நல்ல பலன்களை பெற சமஸ்கிருத மொழியிலேயே மந்திரத்தை சொல்லவும்.
இந்த ஸ்லோகத்தின் இறுதியில், ஸ்ரீ தேசிகரே தண்டக அமைப்பினை சொல்லி , எப்படி இந்த ஸ்லோகம் அந்த அமைப்புக்குள் இணைத்துக் கொள்கிறது என்பதையும் ஒரு ஸ்லோகமாகவே சொல்லியுள்ளார். அந்த கடைசி ஸ்லோகத்தின் மொழியாக்கமும் இதில் இணைக்கப்படவில்லை.
சக்திவாய்ந்த இந்த மந்திரத்தை பொருளுணர்ந்து சொல்லி, எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று வாழ ஸ்ரீ கருட பகவானை வேண்டுகின்றேன்.
*******************
தமிழாக்கம் / ஓதியவர்: ஸ்ரீதேவிபிரசாத்
Translation / Chanting : SriDeviPrasad
Produced By: SriDeviPrasad
*************
Download Sloka and Translation together as a PDF:
www.psdprasad-music.com
www.paattufactory.com
******************
#garudadandakam #garuda #garudamantra #கருடதண்டகம் #paattufactory #psdprasad #கருடன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: