Thiruppugazh
Автор: Chinmaya Sarveshwara
Загружено: 2021-08-19
Просмотров: 1087
அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "வஞ்சத் துடனொரு" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "vanjath-thudanoru".
#######################
வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும்
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு
மண்டிக் கதறிடு ...... வகைகூர
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
அங்கிக் கிரையென ...... வுடன்மேவ
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக் கடியிணை ...... தரவேணும்
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
கன்றச் சிறையிடு ...... மயில்வீரா
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
கண்டத் தழகிய ...... திருமார்பா
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
செந்திற் பதிநக ...... ருறைவோனே
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
சிந்தப் பொரவல ...... பெருமாளே.
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
http://www.chinmayasarveshwara.com/p/...
#######################
முருகக் கடவுள் சார்ந்த பாடல்களின் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
#######################
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: