25.எதிராளியாகிய பிசாசானவன் | சகோ.ஜேம்ஸ் பாஸ்கர் | Your Adversary The Satan | Bro.James Basker
Автор: சத்தியக்கருவூலம் 📖💎 Treasury of Truth
Загружено: 2025-01-31
Просмотров: 1144
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும் கிறிஸ்துவுக்குள்ளான அன்பின் நல்வாழ்த்துகள்.
இந்தப் பாடத்தின் தலைப்பு: எதிராளியாகிய பிசாசானவன்
உங்கள் சிந்தனைக்காக
01.சாத்தான் யார்?
02.சாத்தான் எப்படி இருப்பார்?
03.சாத்தான் எங்கே இருப்பார்?
04.வேதாகமத்தில் சாத்தானைப் பற்றி எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது?
05.சாத்தானுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?
06.ஒளி மற்றும் இருளின் தூதர்கள் யார்?
07.இந்தப் பாடத்தின் மூலம் நமக்கான படிப்பினைகள் என்னென்ன?
இவை போன்ற அநேக மறைவான காரியங்களை வேத வசனங்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு இந்த வகுப்பில் எதிராளியாகிய பிசாசானவன் என்ற தலைப்பில் நாம் கற்றுக் கொள்ளவுள்ளோம்.
அன்பான சகோதரமே, அடிப்படையான இச்சத்தியப் பாடங்களை நாங்கள் பதிவிட்டுள்ள வரிசைப்படி கிரமமாக தியானிக்கவும். ஒரு பாடத்திற்கும் அடுத்தப் பாடத்திற்கும் மிகுந்த தொடர்புகள் உள்ளன. எனவே, தயவுகூர்ந்து வரிசையாகப் பார்த்துத் தியானிக்க வேண்டுகிறோம்.
இப்பாடங்களைக் கண்டு, கேட்டுப் புரிந்துகொண்டு, ஆவிக்குரிய வாழ்வில் ஜெயம் பெற தேவ தயவு வேண்டி ஜெபத்தோடு துவங்கவும்.
இப்பாடத்தின் ஒலிப்பதிவைக் (ஆடியோ) கேட்க விரும்புவோர் கீழ்க்காணும் டெலிகிராம் லிங்கைப் பயன்படுத்தவும்.
https://t.me/c/1909170327/138
பின் குறிப்பு:
இந்தப்பாடம் மற்றும் இதற்கு முந்தைய பாடங்களின் எழுத்து வடிவம் (PDF of SCRIPT) தேவைப்படுவோர் [email protected] என்ற இமெயில் முகவரிக்கு தங்களது பெயர், ஊர் ஆகியவற்றைத் தெரிவித்துப் பெற்றுக்கொள்ளவும். தங்களது தனிப்பட்ட சுதந்திரம் (உங்களது விவரங்கள்) பாதுகாக்கப்படும்.
தயவுகூர்ந்து அடுத்தப் பாடத்தைத் தியானிக்கும் முன், ஸ்கிரிப்டை (PDF of SCRIPT) பெற்று, அதை முழுமையாக வாசித்துப் பயன்பெற பேரன்போடு வேண்டுகிறோம்.
தேவ கரம் இன்றும் என்றும் நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துவதாக. தேவ நாமம் கிறிஸ்துவின் மூலம் மகிமைப்படுவதாக.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: