திருச்சியில் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை |puri jagannath rath yatra at Trichy |iskcon temple trichy |
Автор: Trichy Diary
Загружено: 2025-06-29
Просмотров: 4539
#trichy
#purijagannadh
#aanmeegam
puri jagannath rath yatra 2025
திருச்சியில் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை
पुरी जगन्नाथ रथयात्रा 2025
திருச்சி: 27.06.2025
திருச்சியில் 4வது ஆண்டாக நடைபெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரதயாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகிய மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன.
நாடுமுழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுவந்து வழிபாடு செய்யும் இந்நிகழ்வானது 42 நாட்கள் நடைபெறும்.
பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பகவான் ஜகந்நாதரின் வருடாந்திர பயணத்தை சித்தரிக்கும் ரதயாத்திரை பூரியில் தொடங்கும் அதேநாளில் திருச்சியில் 4வது ஆண்டாக பூரிஜெகநாதரின் ரதயாத்திரை இன்றுமாலை தொடங்கியது.
திருச்சி அண்ணாசிலையில் இருந்து தொடங்கிய இந்த ரதயாத்திரையானது காவிரி பாலம், மாம்பழச்சாலை, அம்மாமண்டபம் வழியாகச் சென்று ஸ்ரீரங்கம் சிருங்கேரிமண்டபத்தில் நிறைவுபெற்றது.
பூரி ஜெகநாதர் கோயில் தேரைபோன்று பாரம்பரிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ரதத்தில், ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோர் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ரதயாத்திரை வெகுவிமரிசையுடன் நடைபெற்றது.
அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் சார்பில் திருச்சியில் நடத்தப்படும் இந்த ரதயாத்திரையில் திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: