Thufan - Al Aqsa | ZahraMusakaleem | Palestine Tamil Song | சுவனத்தின் துண்டு நிலம் | பலஸ்தீன் பாடல்
Автор: Zahra Musakaleem
Загружено: 2023-10-28
Просмотров: 2582903
Thufan - Al Aqsa | ZahraMusakaleem | Palestine Tamil Song | சுவனத்தின் துண்டு நிலம் | பலஸ்தீன் பாடல்
Lyrics: Musakaleem
Vocal: Zahra
Recording studio mixing and Mastering duff :
Kefro Production
பல்லவி
சுவனத்தின் துண்டு நிலம்
பலஸ்தீனம்
கொத்து கொத்தாய் குண்டு மழை
சுஹதா பூமி
இஸ்ராவின் அடையாளம்
நபிமார்கள் பூர்வீகம்
வஹிமழை வஹிமழை
செழித்த நிலம்
ஸலபுகள் பாதம் தொட்ட
பலஸ்தீனம்
نصر من الله وفتح قريب
சரணம்
கொலைவெறியின்
முழு வடிவம்
சியோனிசம் ஒன்றே ஒன்றுதான்
குளமாகும் குருதியிலும்
ஈமானின் உறுதி கண்டோம்.
மங்கையரின் மழலைகளின்
மலை போன்ற துணிவு கண்டோம்
தூபானுல் அக்ஸா நீ
காஸாவின் கம்பீரம்
சரணம்
இறைதூது விதையான
வஹியின் தேசம் நீ
ஈமானின் ஜீவநாதம்
ஒலித்திடும் பத்ரு களம்
பலஸ்தீன் உன் விடுதலைக்காய்
சருகாகும் மலர்கள் நாம்
சியோனிச சிறையில் நீ
உனை மீட்கும் அபாபீல்கள்
சரணம்
பலவந்த குடியேற்றம்!
குடிமகன் பட்டம் வேறு !
பலஸ்தீனின் மைந்தர் நாம்
ஆனாலும் அகதிகளாம் ?!
தாய் மண்ணில் வேரறுந்து
வாழ்வது பேரவலம்
என்ன நீதி? எவர் நீதி?
சர்வதேசம் ஏன் மௌனம்?!
சரணம்
சுவனமதில் சிறகடிக்க
சிறகுகள் ஈந்திடும் மண்
துடைத்தெம்மை துவம்சம் செய்ய
உலகமே திரண்டாலும்
அடியோடு மரம் போல் நாம்
சாய்ந்தாலும் மீண்டெழுவோம்
மனமெங்கும் உன் கனவு
ஸஜ்தாவில் வீழ்கின்றோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: