பூச்சொரிதல் திருவிழா 2025 - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சி மாவட்டம்.
Автор: Samayapuram Mariamman Temple official
Загружено: 2025-03-06
Просмотров: 6622
பூச்சொரிதல் திருவிழா 2025
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சி மாவட்டம்.
மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் இவ்விழா தமிழகத்தின் வேறு எங்கும் நிகழாத விமரிசையான பெருவிழாவாகும். இந்நாளில் காலை திருக்கோயில் பார்வதி மண்டபத்திலிருந்து திருக்கோயில் நிர்வாகம் சார்ப்பில் புஷ்ப கூடையுடன் திருவீதி உலா வருகின்றனர். இதனை அடுத்து காலை 8.00 மணிக்கு மேல் அம்மனின் பச்சைப்பட்டினி விரத காப்பு கட்டுதல் இனிதே துவங்குகிறது.
ரக்ஷாபந்தனம் என்றழைக்கப்படும் நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாலை அணிந்து விரதம் இருப்பர். இச்சம்பவத்தன்று பிரதிஷ கணபதி மூலம் எடுத்துவரும் புஷ்பங்களால் அருள்மிகு அம்பாளுக்கு ஆண்டவர் சன்னதியில் புஷ்ப அபிஷேகம் நடைபெறுகிறது. இது சமயம் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் அம்மனுக்கு ஏராளமான வகைகளுடன் கூடிய மலர்களை அபிஷேகம் செய்வர். அம்மனை விதவிதமான மலர்களால் அலங்கரித்து பக்தர்கள் கண்டு இன்புறுவர்.
தமிழகத்தில் இவ்வாறான பூச்சொரிதல் விழா வேறு எங்கும் நிகழாத, காணக்கிடைக்காத காட்சியாகும். அன்று மாலை 3.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதனை அடுத்து மகாமண்டபத்தில் சாயரட்சை பூஜை அம்பாளுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதில் பச்சைமாவு, இளநீர், மற்றும் பழவகைகள் ஆகியன பூச்சொரிதல் முதல் நாள் முதல் 28 நாட்களுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. மேலும் நீர்மோர், பானகம், துள்ளுமாவு ஆகியனவும் மகாமண்டபத்தில் வைத்து அம்மனுக்கு சாயரட்சை பூஜையை நடத்துகின்றனர். பக்தர்களின் நலன் கருதி அன்று இரவு முழுவதும் திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
பூச்சொரிதல் திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை பல்வேறு பூக்களால் அலங்கரித்து வழிபட்ட வண்ணமாய் இருப்பர். பல்வேறு இனமக்கள் தாங்கள் விரும்பியவாறு ஏராளமான மலர்களை அம்மனுக்கு அணிவித்து மகிழ்வர். இந்நாளில் திருக்கோயில் முழுவதும் மலர்கள் குவிந்து காணப்படும்.
#trichy #tiruchirappalli #samayapuram #samayapuramtemple #samayapurammariamman #mariamman #mariammantemple #poochorithal #poochorithalvizha #flowershower #Festival #amman
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: