Denmark Sri Abirami Amman Temple. டென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆலயம்.
Автор: Abiramiamman
Загружено: 2025-12-31
Просмотров: 128
Denmark Sri Abirami Amman டென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன்
அம்மா அவர்கள் வட தமிழ் ஈழத்தில் ஏழாலை என்னும் ஊரில் திருநாவுக்கரசு – மகேஸ்வரி தம்பதிகளுக்கு செல்வப்புதல்வியாக அவதரித்து லலிதாம்பிகை என நாமம் பூண்டிருந்தார்
சிறு பராயத்தில் குழந்தையை நீராட்டும்போது கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு கண்ணைப் பறிக்கும் வித்யாசமான ஒளி வீசுவதாகவும் தாயார் மகேஸ்வரி உணர்ந்தார். வெளியில் கொண்டு செல்லும் போதும் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒளி வீசியதாக தாயார் உணர்ந்துள்ளார்.
இவர் 9 வயது சிறுமியாக இருந்தபோது அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்டார். மனித உருவில் அவதரித்த அபிராமி அம்பாள் தான் மாதாஜி அபிராமி உபாசகி என்பில் ஐயமேதுமில்லை.
இப்படி வளர்ந்து வருகையில் ஒன்பதாவது வயதில் மாதாஜி அவர்களுக்கு கனவில் அபிராமி அம்மன் தோன்றி 'நான் உன்னிடம் வருவேன்' என்றும் 'என்னை ஆதரிக்க வேண்டும' என்றும் கூறினார். திருமண காலத்தில் இவருக்கேற்ற ஒரு வாழ்க்கைத்துணையை அபிராமி அம்மாள் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு பாலமுருகன் போல ஒரு ஆண் குழந்தையையும் அந்த அபிராமி அம்மாள் கொடுத்தார்.
அம்மா டென்மார்க் நாட்டில் (1994) இருக்கும் போது அபிராமி அம்மன் அம்மாவின் கனவில் வந்து தன்னை நீ ஆதரிக்கவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டார்.
அம்மாவினால் முதலில் ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தது. ஆனால் ஒரு நாள் திடீரென்று அம்மாவின் உடலில் அம்பாள் வந்து அமர்ந்து கொண்டுவிட்டார். அம்மா அவர்கள் தன்னையறியாமல் அருள்வாக்குக் கூறத் தொடங்கிவிட்டார். அது மட்டுமல்ல 5 நாட்கள் அம்மா சுயநினைவின்றி தன்னை மறந்த தெய்வீக நிலையில் இருந்தார். அச்சமயத்தில் மக்களுக்கு விபூதி கொடுத்து மக்களின் நோய்களையும் தீர்த்தார். சுயநினைவு வந்தவுடன் அம்மா அவர்கள் தான் அபிராமி அம்மனாக வாழந்து மக்களை இவ்வுலக துன்பங்களிலிருந்து காப்பாற்றி அவர்களை நல்ல நிலையில் வாழவைப்பேன் என்று சொல்லி தன் வாழ்க்கையை ஆன்மீக வாழ்க்கையாக மாற்றி மக்களுக்காக அர்ப்பணித்தார்.
ஆரம்ப நாட்களில் அம்மா அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் ஒரு அறையில் தெய்வங்களின் திருவுருவப் படங்களை வைத்து பூசைகள் செய்யத் தொடங்கினார். நாளுக்கு நாள் அம்மாவின் அற்புதங்கள் வெளியே பரவத் தொடங்கின. தன்னை நாடி வரும் மக்களுக்கு அருள்வாக்கு சொல்லத் தொடங்கினார் அம்மா. ஒரு நாள் திடீரென அம்மா நாக தெய்வத்தைப் போல நிலத்தில் விழுந்து உருண்டு வளைத்து தன் உடம்பை வருத்தினார்.
அங்குள்ள மக்கள் எல்லோரும் பயபக்தியுடன் அம்மாவின் அருகே நின்று அரோகரா சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அம்மாவின் வாயிலிருந்து உதிரம் கொட்ட இரண்டு மாணிக்கக்கற்களை அம்மா உமிழ்ந்து எடுத்தார். முதல் மூன்று நாட்களாக அம்மா எதுவுமே சாப்பிடாமல் கஷ்டப்பட்டார். வாயில் இருந்து வயிற்றுப்பகுதி வரை மிகவும் வலியினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆங்கே வரும் தொண்டர்கள் அம்மாவிற்கு பால் பழங்களை அருந்த வைத்தார்கள். 3 நாட்களின் பின் அம்மாவின் உடல்நிலை பழைய நிலைக்கு வந்துவிட்டது. மக்கள் இந்த அற்புதங்களை அறிந்ததும் அம்மாவிடம் நேரில் வந்து ஆசி பெற்றுச் சென்றார்கள்.
சிறிது காலத்தின் பின் அபிராமி அம்மாள் தனக்கென்று ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமரவேண்டும் என்று நினைத்தார். அதன் பிரகாரம் அம்மா அவர்கள் அம்மாளின் நிலையில் இருந்து தொண்டர் ஒருவரை அழைத்து ஒரு திசையைக் குறிப்பிட்டு ஒரு இடம் கட்டிடத்துடன் விற்பதாக இருக்கின்றது. அங்கே ஒரு மரம் ஒன்று அதன் அடியில் பொந்து இருப்பதாகவும் கூறினார். அங்கே தான் நான் அமரப்போகின்றேன் என்றும் அந்த இடத்தை உடனே போய் பார்க்கும்படி அருள்வாக்கு மொழிந்தார். அன்று பிற்பகல் கிடைத்த பத்திரிகையில் அந்த இடம் விற்பனைக்குப் போடப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்டைந்தனர். அம்மாவின் அருள் வாக்கின்படி அந்த இடத்தில் ஒரு மரமும் அதன் அடியில் ஒரு பொந்தும் இருப்பதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டனர்.
பங்குனி உத்தரத் திருநாளில் வேப்பம் பீடம் ஒன்றை வைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் நாக பாம்பொன்றில் மாணிக்கக்கற்களை பதித்து மூலஸ்தானத்தின் வலப்பக்கத்தில் அமர்த்தி அபிஷேகங்கள் நடத்தினார் ஆன்மீகத் தாய் அபிராமி அம்மா.
காவியுடைதரித்து கழுத்தில் மலர் மாலையும் தலையில் கிரீடமும் கையில் சூலமும் கொண்ட அம்மாவைப் பார்க்கும்போது பக்தர்கள் மெய்மறந்து நிற்பார்கள். மனதில் உள்ளன்புடனும் நம்பிக்கையுடனும் அம்மாவை பார்ப்பவர்களின் கண்களுக்கு அம்மனாக காட்சியளிப்பார். அம்மாவை தெய்வமாக ஏற்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும் வழ்பவர்களுக்கு ஆதிபராசக்தியாக காட்சியளிப்பார்.
ஓம் சக்தி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: