உடுமலைப்பேட்டை வட்டாட்சியரே! தளி நடப்பனின் ஆக்கிரமிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட தொல்லை என்ன தெரியுமா?
Автор: பறையோசை (Paraiyosai)
Загружено: 2025-11-25
Просмотров: 300
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், தளி கிராமத்தில் ஆனைமலை ரோட்டில் பழைய விநாயகர் கோயில் ஒன்று 48 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்தது.
இந்த கோயில் உள்ள இடமானது வருவாய்த்துறைப் பதிவேடுகளின்படி அரசு நிலமாகும். இதன் புதிய புல எண்.1120/3 ஆகும். இந்த இடத்தின் பரப்பளவு 275 சதுர மீட்டராகும். (அதாவது இந்த 275 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் 48 சதுர மீட்டரில் மட்டும்தான் கோயில் இருந்தது).
தளி ஊர் மக்களால் பெரிய மனிதர் என்று மதிக்கப்படும் தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்கள் 275 சதுர மீட்டர் இடமும் கோயில் இடம்தான் என்று கூறிக் கொண்டும், இக்கோயிலுக்கு அவர்தான் தலைவர் என்று குறிப்பிட்டும் 48 சதுர மீட்டர் பரப்பளவுள்ள கோயிலை கடந்த 20.08.2024 ஆம் நாளில் முழுமையாக இடித்து விட்டு 150 சதுர மீட்டர் பரப்பளவில் கோயிலை விரிவாகவும், சுற்றுச் சுவருடனும் கட்டி விட்டார்.
48 சதுர மீட்டர் பரப்பளவில் கோயில் இருந்த போது, அக்கோயிலைச் சுற்றி தளி பேரூராட்சியால் அமைக்கப்பட்ட கான்கிரீட் பாதையை அப்பகுதி மக்கள் போக்குவரத்துக்கும் தங்களின் பொது உபயோகத்துக்கும் பயன்படுத்தி வந்தார்கள்.
அப்பகுதி மக்கள் மட்டுமல்ல. கார், வேன் முதலான வண்டி, வாகனங்கள் வைத்திருக்கும் ஓரளவு வசதி, வாய்ப்புள்ளவர்களான வடக்கு வீதியில் வசிப்போரும் முன்பிருந்த கோயிலுக்கு தென்புறமும், வடபுறமும் இருந்த இடத்தில்தான் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் மேற்சொன்ன தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்கள் 150 சதுர மீட்டரை ஆக்கிரமித்து கோயிலையும், சுற்றுச் சுவரையும் கட்டி விட்டதால் அப்பகுதி மக்கள் தங்கள் அடிப்படைத் தேவையான குடிநீர் பிடித்துச் செல்வதற்குக் கூட ஆனைமலை ரோட்டிற்கு வந்து, வடக்கே சென்று, பிறகு மேற்கே சென்று தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்கள் முன்பிருந்த கோயிலை இடித்து விட்டு விரிவாகக் கட்டுவதாக அப்பகுதி மக்கள் கேள்விப்பட்டவுடனேயே முன்னாள் பேரூராட்சித் தலைவர் திருமதி. தெய்வநாயகி அவர்களிடமும், தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்களிடமும் சென்று "முன்பு இருந்த அளவிலேயே கோயிலைக் கட்டுமாறும், விரிவாகக் கட்டினால் எங்கள் போக்குவரத்துக்கும், எங்கள் வீடுகளில் நல்லது, கெட்டது நடந்தால் நாலு பேர் உட்கார்வதற்கும் சிரமமாகும்" என்றும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இருவரும் மறுத்து விட்டனர்.
எனவே, அப்பகுதியில் உள்ள மக்கள் சார்பாக திரு. ஆறுமுகம், திரு. முருகன், திரு. பாண்டிக்குமார், திரு. பிரகாஷ் ஆகியோர் உடுமலைப்பேட்டை வட்டாட்சியர், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர், தளி கிராம நிர்வாக அலுவலர், தளி பேரூராட்சி செயல் அலுவலர், தளி காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் தங்கள் கோரிக்கையை மனுவாகக் கொடுத்தனர்.
ஆனால் அன்றைக்கு உடுமலைப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியராக இருந்த திரு. ஜஸ்வந்த் கண்ணன் அவர்கள் அம்மக்களின் கோரிக்கையைப் பொருட்படுத்தாமல் தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக கோயிலைக் கட்டிக் கொள்ளுமாறு அனுமதித்து விட்டதால் தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்கள் கோயிலையும், சுற்றுச் சுவரையும் கட்டி விட்டார்.
தற்போது அதாவது கடந்த 10.11.2025 ஆம் நாள் முதல் மேற்படி கோயிலுக்கு வடபுறம் உள்ள மீதி இடத்திலும் "அமிர்த மண்டபம்" என்ற ஒன்றைக் கட்டிக் கொண்டுள்ளார்.
தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதைத் தெரிவித்து, தற்போது கட்டிக் கொண்டிருக்கும் அமிர்த மண்டபக் கட்டுமானப் பணியை உடனே நிறுத்த உத்தரவிட வேண்டுமாயும், இந்திய மதச் சார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணாக அரசு இடத்தில் தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்களால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டுத்தலத்தையும் அகற்ற வேண்டுமாயும் கடந்த 18.11.2025 அன்று உடுமலைப்பேட்டை வட்டாட்சியர், தளி கிராம நிர்வாக அலுவலர், தளி பேரூராட்சி செயல் அலுவலர், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் உள்பட தமிழ்நாடு ஆளுநர் வரை அனைவருக்கும் மனு அனுப்பினேன்.
ஆனால் தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்கள் தொடர்ந்து பகிரங்கமாக அமிர்த மண்டபத்தைக் கட்டிக் கொண்டுள்ளார்.
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 15.11.2025 ஆம் நாளில் அப்பகுதியில் வசிக்கும் திரு. ஆறுமுகம் அவர்களின் தயார் திருமதி. முத்தம்மாள் அவர்கள் இறந்து விட்டார். அவருடைய தாயின் உடலை திரு. ஆறுமுகம் அவர்கள் தன் வீட்டில் வைத்து இறுதிச் சடங்கை செய்ய இயலாமல் தன் அண்ணனின் வீட்டிற்கு எடுத்துச் சென்றுதான் இறுதிச் சடங்கை செய்ய வேண்டிய நிலையை தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்கள் தன் ஆக்கிரமிப்பால் ஏற்படுத்தியிருக்கிறார்.
இவ்வாறு பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் வருவாய்த்துறையும், தளி பேரூராட்சியும், தளி காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
வருவாய்த்துறையினர், பேரூராட்சியினர், காவல்துறையினர் பெறும் சம்பளம் தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்களைப் போன்ற பொருளாதார, அரசியல், சமூக செல்வாக்கு உள்ளவர்களிடம் மட்டுமிருந்தே பெறப்படும் வரியிலிருந்துதான் பெறுகிறார்களா?
சாதாரண ஏழை, எளிய மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்தும்தான் சம்பளம் பெறுகிறோம் என்ற நன்றியுணர்ச்சி அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் துளியும் இல்லையா?
என்ற கேள்விகளை எழுப்பியிருப்பதுடன்...
கோயில் 20.08.2024க்கு முன்பு எப்படி இருந்தது?
பொது மக்கள் பயன்பாட்டில் எவ்வளவு இடம் இருந்தது?
தளி திரு. நடப்பன் (எ) திருமூர்த்தி அவர்களின் ஆக்கிரமிப்பால் அம்மக்களுக்கு என்ன தொல்லை ஏற்பட்டுள்ளது?
என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ள பதிவே இக்காணொலி ஆகும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: