சிவகங்கை கோவிலூர் சங்கன் திடல் நிலப் பிரச்சினை | முத்தரையர் மக்களுக்கு எதிரான அத்துமீறல் |
Автор: PPM SQUAD
Загружено: 2025-12-28
Просмотров: 580
சிவகங்கை மாவட்டம், கோவிலூர் சங்கன் திடலில் கடந்த 60 ஆண்டுகளாக முத்தரையர் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
1981 முதல் வீட்டு வரி ரசீது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ ஆதாரங்களும் நம் மக்களிடம் உள்ளது.
இந்த நிலையில், 2016-ல் பட்டா வாங்கியதாக கூறி, மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் JCB இயந்திரம் கொண்டு வீடுகளை அகற்ற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து முத்தரையர் மக்கள் ஒன்றிணைந்து தைரியமாக எதிர்கொண்டார்கள்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் பொறுப்பாளர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.
குன்றக்குடி காவல் நிலையத்தில் புகார், FIR மிரட்டல் உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில், இது சிவில் கேஸ் – சட்டப்படி கோர்ட்டில் எதிர்கொள்வோம் என்ற உறுதியுடன் நம் மக்கள் ஒன்றுபட்டனர்.
காவல்துறையினர் அளவிடவோ, தலையிடவோ மாட்டோம் என்று உறுதி அளித்த பின், மக்கள் மனநிறைவுடன் வீடு திரும்பினர்.
இந்த பிரச்சினையில் உறுதுணையாக நின்ற அனைத்து நிர்வாகிகளுக்கும், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் லதா அக்கினி அவர்களின் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 🙏
இந்த வீடியோ உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. உரிமைக்கான போராட்டத்தில் ஒன்றிணைவோம் ✊
#Mutharaiyar #MutharaiyarRights #Sivagangai #Kovilur #SanganThidal #LandIssue #JusticeForMutharaiyar #TNMPA #SinghaTamilan #CivilCase
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: