Fathima Naayahi Munajat | ஃபாத்திமா رضی اللہ عنھا முனாஜாத் | DAFF VERSION | Ahmad Salih Faheemi
Автор: Ahmad Salih Faheemi
Загружено: 2021-11-28
Просмотров: 386617
A soulful poem recited in praise of Seyyidatun Nisa-i Ahlil Jannah [the leader of the women of paradise], Seyyidatuna Fathima Zahrah [radiyallahu anha]. This has been recited for over a hundred years especially by women during various occasions.
ஸெய்யிததுனா ஃபாத்திமா நாயகி رضی اللہ عنھا முனாஜாத்
LYRICS :
லாயிலாஹ இல்லல்லாஹு
லாயிலாஹ இல்லல்லாஹ்
லாயிலாஹ இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
முபஸ்மிலன் முஹம்திலன்
முஸல்லியன் முஸல்லிமா
அலன்னபீ வல்ஆலி வல்அஸ்
ஹாபி ஸித்தி ஃபாத்திமா
மர்ஹபன் வமர்ஹபன்
அஹ்லன் வஸஹ்லன் தாஇமா
லில் முஸ்தஃபா வல் முர்தضழா
வபுனாஹுமா வல் ஃபாத்திமா
ஆதியான நாயனுக்கு
அடங்கலான புகழுமாம்
நீதியான நபி தமக்கு
நித்தமும் ஸலாத்துமாம்
பரகத்தான நாயகி
பதூல zஸஹ்றா ஸித்தினா
ஹரகத்தான zஸல்லத்தை
அகற்றி வைப்பீர் ஃபாத்திமா
தங்கமான தவ்லத்தே
தயாளமான ரஹ்மத்தே
பங்கமான பாவத்தை
பறக்க வைப்பீர் ஃபாத்திமா
ஃதனாவுக்குரிய தாயகி
ஃதவாபுக்குரிய நாயகி
ஃதானியில்லான் தான் புகழும்
தாஹா மகளாம் ஃபாத்திமா
ஜாஹு பெற்ற அலியுல்லாஹ்வின்
ஜாதியான செல்வியாம்
ஷாஹு ஆலம் ஷாஃபிஇய்யின்
சந்ததியாம் ஃபாத்திமா
ஹஸன் ஹுஸைன் வ முஹ்ஸினை
அழகாக பெற்ற மாதாவே
கஸ்தியான கருமம் நீக்கி
காத்தருளும் ஃபாத்திமா
خகாலிக்குகந்த கண்மணி
خகைரான நபியின் கபிதத்தே
மாலிக்கான மன்னரே
மகராஜ் பெற்ற ஃபாத்திமா
தருமம் மிகுந்த தாபரமே
தயவு செய்யுந் தருணத்தில்
வறுமம் பண்ணும் வம்பரை
வதை செய்வீர்கள் ஃபாத்திமா
ذதாத்தி னொளிவி லுதித்த ஒளிவால்
தரித்த ஒளிவே நாயகி
خகாத்திம் நபியின் பிضழ்அத்தே
خகைருன்னிஸாவே ஃபாத்திமா
ரஹ்மத்தான ரஹ்மில் நின்றும்
இரட்சிப்போ ரனந்தம் பேர்
தகுமதான குதுபுமார்கள்
தரித்த ஸித்தி ஃபாத்திமா
zஜஹ்றா பீவி ழீனத்தால்
சமானமற்ற நாயகி
துஹ்ரத்தாக துதிக்கும் நாயன்
தூய ஸித்தி ஃபாத்திமா
சுவர்க்கந் தன்னில் ஸூரத்தாய்
துலங்கி நின்ற நாச்சியார்
எவர்க்கும் பாவா வான ஆதம்
ஏகிக் கண்ட ஃபாத்திமா
சிரசில் தாஜும் கழுத்தில் சவடி
சிறப்பாய் இரண்டு காதிலும்
சிறக்க துலிக்கா போட்டுத் துலங்கும்
சிறந்த ஸித்தி ஃபாத்திமா
சந்தல் மணமாம் அந்தத் தாஜு
ஸாஹிபுல் பضழீலத்தி
அந்த ஸூரத்தில் அமைந்த
ஐவராகும் ஃபாத்திமா
ضழல்லத்தான சொல்லை நீக்கி
ஷறஇன் வழியில் خகைறை நல்கி
عஇல்லத்தான மருளைப் போக்கீ
டேற்றம் செய்யும் ஃபாத்திமா
தையிபான அப்துல்லாஹ் தன்
கூட பிறந்த காஸிமாம்
zஸைன பும்மு குல்ஃதுமாம்
வzஸைனப் ருகையா ஃபாத்திமா
ظலில்லில் லிவாவில் சேர்த்தருளும்
சித்தமான ஹضழ்ரத்தில்
அல்லலகற்றி ஆண்டருளும்
ஆதி ஸித்தி ஃபாத்திமா
அர்ஷிடத்தில் அலி தமக்கு
அமரர் கூடும் மஜ்லிஸில்
கருதி பெறவே மங்களக்
கலியாணஞ் செய்த ஃபாத்திமா
غஙைபில் குறித்த மஹர் தமக்கு
கோமானீந்த ஷஃபாஅத்
عஐபான பெண்கள் பாவங்களை
அழிக்கும் ஸித்தி ஃபாத்திமா
ஃபாத்திமாவின் மகள் மகவை
ஃபாத்திமாவின் மகந் தனக்கு
خகாத்திமான நபி முடித்த
கண் குளிர்ந்த ஃபாத்திமா
குர்றத்துல் ஐனைனியாம்
குறைஷி குலத்தின் தீபமாம்
دதர்ருன் வஃதமரதுல் கதீஜா
தங்க மகளாம் ஃபாத்திமா
கறமலிய்யுல்லாஹ் தமக்கு
காதலி யிருக்கையில்
ஹறாமதாகும் மறு பெண் முடிக்க
அறியும் ஸித்தி ஃபாத்திமா
லய்ஸலீ ஷய்வுன் ஸிவாக்கி
லாயிகான ஹضழ்ரத்தில்
கையைப் பிடித்து காதிரிய்யில்
காட்சி காட்டும் ஃபாத்திமா
மலக்கு ஜிப்ரஈலைக் கண்டு
மனதால் சொன்ன சொல்லுக்கு
கலக்க மகற்றி ஸித்கை யறிந்து
காட்சி பெற்ற ஃபாத்திமா
நாச்சியாரின் மத்ஹை ஓது
நாட்டந் தீரும் நாள் தோறும்
ஹாஷிமாம் மன்றாட்டஞ் செய்யும்
அரசி ஸித்தி ஃபாத்திமா
வரிசையான ஆயிஷாவும்
வசையால் வார்த்தை சொன்னதால்
பிரிசமாக நபியை மேலாய்
பேசும் ஸித்தி ஃபாத்திமா
ஹாதியான வழியிலருளும்
ஹாவு வாவு இரண்டையும்
خகாதிமான அப்துல்லாஹ்வை
காக்கும் ஸித்தி ஃபாத்திமா
லாமலாத லீ ஸிவாக்கி
லாzஸிமாய் லிவாவினில்
ஆமதாக்கி ஹضழ்ரத்துல்
பகா விலாக்கும் ஃபாத்திமா
ஏழை மனுக்கள் கேட்கும் துஆவை
ஏற்றுக் கொள் யா ஃபாத்திமா
நாளை மஹ்ஷர் வேளையில்
நஜாத்தை தருவீர் ஃபாத்திமா
வஸ்ஸலாமு மின் ஸலாமின்
மஃஸலாத்தின் தாஇமா
அலா அபீகி வஅலைக்கி
ஆலி ஸித்தி ஃபாத்திமா
கால ஹாதா யிபுனு மன்
خகலீபத் ஷெய்கு பூக்கோயா
குதுபுzஸ்ஸமானி பضழ்லுல்லாஹி
ஸிப்தி ஸித்தி ஃபாத்திமா
லாயிலாஹ இல்லல்லாஹு
லாயிலாஹ இல்லல்லாஹ்
லாயிலாஹ இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
CREDITS:
Voice: Hafiz B.S. Ahmad Salih Faheemi
Audio Mixing: Fahmi Farooqi
Editing: MSL Studio
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported By :
PSA Pallak Lebbe Family
Kayalpatnam
#AhmadSalihFaheemi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: