வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு செபம் | Annai Velankanni Prayer | Prayer | Matha Prayer | Theadal Media
Автор: THEADAL MEDIA
Загружено: 2020-07-11
Просмотров: 91702
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு செபம்
வேளாங்கண்ணி மாதாவே! பரலோக பூலோக அரசியே!
துன்புறுவோருக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே!
உம்முடைய உன்னதமான சன்னிதானம் தேடிவந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம். உம்முடைய திருமுகத்தை அண்ணாந்து பார்த்து உம்மை கூவி
அழைக்கின்றோம்.
தாயே உலகில் எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும், நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ!
உம்மைத் தேடி வந்த துயருறுவோர் அனைவருக்கும் உதவியாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்.
நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்!
நீர் உதவாவிட்டாhல் எங்களுக்கு வேறு யார் உதவுவார்!
நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்!
நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்!
தஞ்சமென ஓடிவரும் அடியார்மேல் தயவாயிரும்.
தாயே! தயைக் கடலே!
தவித்தவர்களுக்குத் தஞ்சமே!
துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளால் வாடியிருக்கும நாங்கள், இன்று உம் இரக்கத்தைத் தேடி வந்துள்ளோம். எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ!
எங்கள் வேண்டுதல் பலனற்றதாய்ப் போகுமோ!
அம்மா! எங்கள் அன்புள்ள தாயே! இரக்கம் நிறைந்தவளே!
எங்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும். எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை மீட்டருளும். நாங்கள் இன்னும் சிறிது காலம் துன்புறுதல் இறைவனின் சித்தமானால் நாங்கள்
அவற்றை அன்புடன் ஏற்றுக் கொள்ள சகிப்புத் தன்மையைத் தாரும், தாயே! - ஆமென்.
Follow Us:
Facebook : Theadal Media
Youtube : Theadal Media
Instagram : Theadal Media
Twitter : Theadal Media
For Contact: [email protected]
#TheadalMedia #MotherMaryPrayer #VelankanniMatha #OurLadyofGoodHealth #MoetherMary #Prayer #Saints #SaintsPrayer #FrVictorArmstrong #ThedalMedia #WordofGod #BibleReflection #Bible #BibleMessage
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: