கோடில ஒருத்தரால தான் இந்த சிற்பங்களை பாக்க முடியும்! மூலை முடுக்கெல்லாம் செதுக்கப்பட்ட சிற்பங்கள்!
Автор: Praveen Mohan Tamil
Загружено: 2021-08-24
Просмотров: 104319
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - [email protected]
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
00:13 - குட்டி குட்டி சிற்பங்கள்
00:49 - குட்டி மான்
01:35 - ஆச்சரியமூட்டும் பறவையின் சிற்பங்கள்
02:17 - குரங்குகளின் மிகச்சிறிய சிற்பங்கள்
03:34 - சிற்பங்கள் நிறைந்த தூண்
04:56 - ராட்சத சுவர்
07:52 - கோவிலுக்கு வெளியிலும் சிற்பம்
10:00 - அங்கோர் வாட் கோவிலின் அளவு
12:00 - சிற்பம் செதுக்கப்படாத ஒரே இடம் இது தான்
14:04 - கதவுகளிலும் சிற்பங்கள்
18:55 - காணாமல் போன ceiling சிற்பங்கள்
21:03 - முடிவுரை
Hey guys, இன்னைக்கு நம்ம கம்போடியால இருக்கற Angkor Wat கோவில பத்தி இன்னும் சில விஷயங்கள பாக்க போறோம். உலகத்துலயே இது தான் மிகப்பெரிய கோவில்னு நம்ம கேள்விப்பட்டு இருப்போம், ஆனா இதோட உண்மையான மர்மம் என்னன்னா, இது பெரிய கோவில் மட்டும் இல்ல. உலகத்துலயே ரொம்ப நுணுக்கமா செதுக்கப்பட்ட சிற்பங்கள் இருக்க ஒரே கோவிலும் இதுதான்.
உதாரணமா, இந்த தூண பாத்தீங்கன்னா, சிற்பங்கள் இந்த தூண முழுசா cover பண்ணிருக்கு. நல்லா பக்கத்துல போய் பாக்கலன்னா, இத உங்களால கண்டுபிடிக்கவே முடியாது.
ஏன்னா இந்த சிற்பமெல்லாம் ரொம்ப ரொம்ப சின்னது. இதெல்லாம் நெறய வகையான மிருகங்களோட சிற்பங்கள், இதோட வேலைப்பாடுகள நல்லா கவனிச்சு பாருங்க. இதெல்லாம் ரொம்பவே சின்னதா இருக்கு.
உதாரணமா, இந்த மான பாருங்க. அதோட கண்கள கூட நம்மளால பாக்க முடியுது. அது மட்டுமில்லாம அதோட வாய் ஒரு millimeter அளவு தான் நீளமா இருக்கு. இந்த column முழுசா இந்த மாதிரி சின்ன சின்ன வினோதமான சிற்பங்கள் நெறய இருக்கு. இப்டி column முழுக்க இந்த அளவுக்கு சின்ன சிற்பங்கள செதுக்குறது அந்த சிற்பிகளுக்கு ரொம்பவே கஷ்டமான ஒன்னாதான் இருந்திருக்கும்.
ஆனா இந்த மாறி சின்ன சிற்பமெல்லாம் இந்த ஒரு column-ல மட்டும் தான் இருக்கா? நான் எல்லா column-ah யும் ஒன்னு ஒண்ணா கவனிச்சு பாத்தப்ப தான், எனக்கு இத பத்தின ஆர்வம் அதிகமாச்சு. ஏன்னா இங்க இருக்கற ஒவ்வொரு column-லயும் இந்த சின்ன சின்ன சிற்பங்கள் செதுக்கப்பட்ருக்கு. இங்க பாருங்க, ரெண்டு பறவைகள் முத்தம் குடுக்கற மாதிரியும், இன்னொரு column-ல ரெண்டு பறவைகள் சண்ட போடற மாதிரியும் செதுக்கிருக்காங்க.
திரும்பவும் நான் என்ன சொல்லவரேன்னா, இந்த சிற்பங்கள் millimeters அளவுக்கு சின்னதா இருக்கு. உங்களால இந்த பறவைகளோட கண்கள பாக்க முடியும். அதோட தலைல இருக்க கொண்டைய, அதோட படர்ந்து விரிஞ்ச சிறகுகள, வால, கால்கள,
அதுமட்டும் இல்லாம அதோட குதிங்கால கூடவிடாம முழுசா செதுக்கிருகாங்க.
இது எல்லாமே ஒன்னுல இருந்து ரெண்டு inch-ல தான் செதுக்கிருகாங்க. அது மட்டுமில்லாம இந்த தூண்ல இருக்கற இதெல்லாம் திரும்ப திரும்ப நேர்த்தியா அச்சுல வார்த்த மாதிரி இருக்கு. இந்த column-ல குரங்குகள் நெறய வேலைகள பண்ணிட்டு இருக்க மாதிரி இருக்குது. இன்னும் நம்மள ஆச்சர்யப்படுத்தற அளவுக்கு நெறய interesting-ஆன patterns இதுல இருக்குது. இந்த column முழுக்க இந்த மாறி சிற்பங்கள் பரவி இருக்கறத நமக்கு காட்டுது.
நீங்க இத நம்பாம கூட இருக்கலாம். இங்க இருக்கற எல்லா column-லயும் இந்த மாதிரி செதுக்கிருக்கறத நான் பாக்கறேன். இது கொஞ்சம் crazy-ஆ இருக்குது. ஏன்னா இந்த Angkor Wat கோவில்ல மொத்தம் 1532 columns இருக்கு. எல்லாத்துலயும் இந்த மாதிரி செதுக்கிருக்காங்க. நெறய columns சேதமடைஞ்சு தரைல விழுந்திருந்தாலும், அதுலயும் இந்த சின்ன சின்ன சிற்பங்களெல்லாம் இருக்கு.
இங்க இன்னொரு அசத்தலான விஷயம் இந்த column-ல இருக்கு. இவங்க கடவுளோட சிலைகளை செதுக்கி இருந்தா கூட, மிச்சம் இருக்கற இடங்கள இந்த சின்ன சின்ன சிற்பங்களெல்லாம் cover பண்ணி இருக்கு.
ஒரு சின்ன இடத்தை கூட சும்மா விடாம பூ, இலை
எல்லாம் கூட செதுக்கிருகாங்க. உலகத்துலயே பெரிய கோவில கட்டுறத பத்தி மறந்துருங்க. இந்த சின்ன சின்ன carvings -ah ஒவ்வொரு inch-லயும் இங்க இருக்க எல்லா column-லயும் செதுக்குற விஷயத்தை பத்தி கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க. ஆனா இந்த சிற்பங்களெல்லாம் column-ல மட்டும் தான் இருக்கா?
இந்த சின்ன சின்ன சிற்பங்களெல்லாம் என்னய ரொம்ப கவர்ந்து இழுத்தப்ப தான், இது column-அயும் தாண்டி வேற எங்கயோ போறத கவனிச்சேன். அது மேல நீண்டுகிட்டே போய், அதோட top வரைக்கும் போகுது. இப்ப top beam-ல இருக்கற இந்த சின்ன carvings-அ பாருங்க.
இது வினோதமா இருக்கு. அதனால நான் சுத்தி இருக்கற சுவர பாக்க ஆரம்பிச்சேன். எனக்கு shock-ஆ இருக்கு. இந்த சுவர கொஞ்சம் பாருங்க. எங்க பாத்தாலும் இந்த carvings நெறஞ்சுருக்கு. நல்லா கிட்ட பாருங்க, இங்க இருக்கற நெறய வகையான பூ, இலை, கொடி அப்பறம் அலங்காரத்துக்காக தொங்கவிடற செடிலாம் உங்களால பாக்க முடியும்.
இத சொல்றதே கொஞ்சம் crazy-ஆ தான் இருக்கும். ஆனா இது தாங்க தான் உண்மை. இந்த உலகத்துலயே பெருசா இருக்க கோவில்ல ஒவ்வொரு inch-யும் இந்த carvings முழுசா cover பண்ணிருக்கு. Carve பண்ணாம இருக்க ஒரு inch இடத்த கூட உங்களால கண்டுபிடிக்கவே முடியாது.
400 acres பரப்பளவு இருக்கற ஒரு கோவில
அதுவும் ஒவ்வொரு inch-லயும் சின்ன சின்ன carvings-ஓட கட்டுறத கொஞ்சம் கற்பன பண்ணி பாருங்களேன். Wow!! அப்போ இது எவ்ளோ பெரிய ஒரு பிரமாண்டமான task -ah இருந்திருக்கணும். ஆனா உண்மையாவே அவங்க ஒவ்வொரு inch-லயும் செதுக்கிருப்பாங்களா?
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: