16 ஏக்கரில் பிரமாண்ட கோயில் - Hidden temple near chennai | Unexplored | Perumaltemple
Автор: Dinamalar
Загружено: 2025-12-07
Просмотров: 6326
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள
பாபுராயன்பேட்டை கிராமத்தில் விஜயவரதராஜர் கோயில் அமைந்துள்ளது.
கிருஷ்ண பண்டிதர் என்பவர் காஞ்சி வரதராஜபெருமாளின் பக்தர். திவான் என்ற முக்கிய அதிகாரியாக இருந்தார். இவரின் மகன் பாபுராயரும் பெருமாள் பக்தர்.
காஞ்சி வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தின் போது ஒவ்வொரு நாளும் தரிசனம் செய்து வந்தார்.
ஒரு நாள் வீட்டில் பூஜை முடித்து வர தாமதம் ஆனதால் பெருமாளை தரிசனம் செய்ய முடியாமல் போனது. இதனால் உண்ணாமல் விரதம் இருந்தார்.
மூன்றாம் நாள் பாபுராயனின் கனவில் வந்த வரதராஜ பெருமாள் தெற்கில் தமக்கு ஒரு கோயில் அமைக்க சொன்னார். தினமும் அங்கிருந்து தரிசனம் தருவதாக உறுதி அளித்தார்.
அதன் பிறகே கோயில் கட்டும் இடத்தை கண்டனர். விஜய நகர
பேரரசின் நாயக்க மன்னர்களால் பாபுராயன்பேட்டை விஜயவரதராஜ பெருமாள் கோயில் கட்டப்பட்டது
பாபுராயன் என்ற கிராமம் ஒரு காடாக இருந்தது. அந்த இடத்தை மாற்றி அமைத்த போது புற்று ஒன்றில் பசு பால் சொரிவதை
கண்ட போது அந்த இடத்தை தோண்டினர். அங்கு 2 ஆஞ்சநேயர் சிலைகள் கிடைத்தன.
ஐந்து கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் கொண்டு 16 ஏக்கரில் அழகாக கட்டப்பட்ட இந்த கோயில் இப்போது சிதிலமடைந்து கிடக்கிறது.
இந்த கோயிலின் மூலவர் விஜய வரதராஜர். தாயார் விஜயவல்லி. விஜய புஷ்கரனி மற்றும் கமல தீர்த்தம் உள்ளன.
துளசி மற்றும் தாமரை கொண்டு பெருமாளுக்கு பூஜை செய்யப்படுகிறது. வாகன மண்டபம் மற்றும் திருமஞ்சன
மண்டபம் மிகவும் சேதம் அடைந்துள்ளது.
காஞ்சி வரதராஜர் கோயிலில் இருப்பது போல இங்கேயும் தங்கம்
மற்றும் வெள்ளியில் பல்லியின் அச்சுகள் உள்ளன.
ராதா ருக்மனி, சீதா தேவி அனுமன், கருடன், ஆழ்வார் என 4 சன்னதிகள் தனித்தனியே உள்ளன# #HiddenTemple
#PerumalTemple
#UnexploredPlaces
#ChennaiTourism
#TempleArchitecture
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: