Radha Kalyanam
Автор: திருத்தலம் தரிசனம்
Загружено: 2026-01-17
Просмотров: 129
#tirunelveli #radhakrishna #radhakalyanam #tenkasi #krishna #radheradhe #harekrishna
தென்காசி மேலகரத்தில் தனுர்மாத பஜனை நிறைவாக ராதா கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது கிராமத்து மகாஜனங்கள் கலந்து கொண்டு திவ்ய தம்பதியினரின் கல்யாணத்தை தரிசனம் செய்தனர்
தென்காசி மாவட்டம் மேலகரத்தில் ஸ்ரீ கோபாலகிருஷ்ண சுவாமி பஜனை சபா கடந்த 80 வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது அப்பகுதியில் ஆன்மீக விழாக்கள் தனுர் மாச பஜனை இந்திர விழா போன்றவை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது அதன் ஒரு நிகழ்வாக கடந்த 16.01.25 அன்று தனுர் மாச பஜனை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நிறைவு பெற்றது இதனை ஒட்டி தினமும் காலை பஜனை குழுவினரின் வீதியில்
நாமசங்கீர்த்தனம் பஜனை மடத்தில் திவ்ய மங்கள பஜனையும் நடைபெற்றது நிறைவு நாளான இன்று அதிகாலை கோபூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது தொடர்ந்து சுகாசினி பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் ரவி மற்றும் ஸ்ரீ ஹரிஹர கிருஷ்ண பாகவதர் தலைமையில் உஞ்சவிர்த்தி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மேலகரம் குளத்துமணி பாகவதர் தலைமையில் ராதா கல்யாண மஹோஸ்தவம் சிறப்பாக நடைபெற்றது இதற்காக கிராம மகாஜனங்கள் பல்வேறு சீர் வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக பஜனை மண்டலிக்கு எழுந்தருளினர் அதனைத் தொடர்ந்து திவ்ய நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது தொடர்ந்து ராதைக்கும் கிருஷ்ணருக்கும் கோத்திர பிரபாகம் கூறி பக்தர்களின் ஆரவாரத்துடன் திருமாங்கல்யதாரணம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மங்கள அட்சதை சேர்ப்பிக்கப்பட்டு திருமண சடங்குகளான பால்பழம் கொடுத்தல் நலுங்கிடுதல் பூப்பந்து ஏறிதல் போன்றவைகள் நடைபெற்றன, நிறைவாக ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு மங்கள ஆரத்தி சமர்ப்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது மாலையில் சகஸ்ரநாம அர்ச்சனை ஆஞ்சநேய உற்சவம் நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோபால கிருஷ்ணசாமி பஜனை சபா குழுவினர் செய்திருந்தனர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: