சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா 2025
Автор: Samayapuram Mariamman Temple official
Загружено: 2025-04-03
Просмотров: 3585
சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா
கலியுகம் காக்க கண்கண்ட தெய்வமாய், சுயம்புத் திருமேனியாக, விக்கிரம சிம்மாசனத்தில் எழுந்தருளியுள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் உலக நன்மைக்காகவும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் நோய், பிணி, தீவினை அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க, தானே வருடந்தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இத்திருத்தலத்தின் தனிப்பெரும் சிறப்பு.
அவ்வாறு பச்சை பட்டினி விரதம் பூரணம் அடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல் , காத்தல், அழித்தல் , மறைத்தல் , அருள்பாலித்தல் என ஐந்து தொழில்களையும் சித்திரை பெருவிழா நாட்களில் மாரியம்மன் அருள்புரிவதால் தேர் திருநாள் அன்று அம்மன் செவி சாய்த்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஐதீகம்.
எனவே எண்ணிய காரியம் இனிதே ஈடேற தேர் வடம் பிடிக்க பக்தர்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்து எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
பங்குனி மாதம் 21ஆம் தேதி ஏப்ரல் 4 2025 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் முகூர்த்தகால் நடுதல்
பங்குனி மாதம் 23ஆம் தேதி ஏப்ரல் 6 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம்
பங்குனி மாதம் 30 ஆம் தேதி 13 ஏப்ரல் 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் சித்திரை தேர் முகூர்த்தகால் நடுதல்
சித்திரை மாதம் 2 ஆம் தேதி 15 ஏப்ரல் 2025 செவ்வாய்க்கிழமை காலை 10:31 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல்
அம்மன் அருள் பெற அனைவரும் வாரீர்..!
#trichy #tiruchirappalli #samayapuram #samayapuramtemple #samayapurammariamman #mariamman #mariammantemple #carfestival #chithiraithiruvizha
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: