அல்சர் சிகிச்சை எடுக்கலைன்னா என்ன ஆகும்? | What if we do not take Treatment for Ulcer | Dr Maran
Автор: Dr Maran
Загружено: 2025-09-25
Просмотров: 98
#Ulcer #அல்சர்
வயிற்றுப் புண்களின் சிக்கல்களையும், சரியான நேரத்தில் அதற்கு சிகிச்சை பெறுவது ஏன் முக்கியம் என்பதையும் இந்த வீடியோவில் டாக்டர் மாறன் விளக்குகிறார். வயிற்றுப்புண் என்பது அடிப்படையில் வயிற்றுக்குள் இருக்கும் ஒரு காயம் ஆகும். இதன் மேல் தொடர்ந்து வயிற்று அமிலம் படுவதால் வலி மற்றும் அசௌகரியத்தை அது ஏற்படுத்துகிறது. நோயாளிகள் பெரும்பாலும் குமட்டல், வாந்தி, உடல் எடை இழப்பு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை அனுபவிக்கின்றனர். அதே சமயம் சிலர் அதிகமாக உணவு உண்ணலாம் என்றும், அதனால் உடல் எடை அதிகரிக்கலாம் என்றும் மருத்துவர் மாறன் கூறுகிறார்.
இந்த நோய் நிலையின் முக்கியமான அபாயங்களில் ஒன்று இரத்தப்போக்கு ஆகும். நாள்பட்ட இரத்தப்போக்கு இருந்தால் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கலாம். அதே சமயம் திடீர் கடுமையான இரத்தப்போக்கு உயிருக்கு ஆபத்தானதாக கூட மாறலாம். இதன் அறிகுறியாக தார் போன்ற கருப்பு நிறத்தில் மலம் இருக்கலாம். கடுமையான இரத்தப்போக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில், புண்கள் வயிற்று சுவரை அரித்து துளையிடலாம். இதற்கு கண்டிப்பாக அவசர சிகிச்சை தேவைப்படும். மீண்டும் மீண்டும் புண்ணாகி குணமடைவது வடுத்திசுக்களை வயிற்றில் ஏற்படுத்தலாம். இந்த வடுக்கள் வயிற்றுக்குள் உணவு இயல்பாக நகர்வதை தடுக்கலாம். மிகவும் அரிதான நிகழ்வாக, சிகிச்சையளிக்கப்படாத வயிற்றுப்புண்கள் வயிற்று புற்றுநோயாக மாறலாம். அதிர்ஷ்டவசமாக, நவீன மருந்துகளால் இந்த சிக்கல்களில் பெரும்பாலானவற்றை தடுக்க முடியும். தொடர்ச்சியான வயிற்று வலியை புறக்கணிக்காதீர்கள். என்று டாக்டர் மாறன் வலியுறுத்துகிறார். ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் இதன் மூலம் வலியுறுத்துகிறார்.
https://springfieldwellnesscentre.com/ என்ற வலைதளத்திற்கு சென்று உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி மேலும் அறிந்துக்கொள்ளவும் அல்லது +91-9952002927 என்ற எண்ணில் மருத்துவர் மாறனை தொடர்பு கொள்ளுங்கள். (Gastro Surgeon in Chennai).
சுவாரசியமான சில அறுவை சிகிச்சை அனுபவங்களைப் பற்றி வாசிக்க வேண்டும் என்றால் மருத்துவர் மாறனின் இன்னொரு சொந்த வலைத்தளமான https://drmaran.com/ க்கு சென்று வாசியுங்கள்.
மருத்துவர் மாறன் அவர்களின் எழுத்துக்களை பின் தொடர வேண்டும் என்றால் கீழ்காணும் சமூக ஊடக வலைதளங்களுக்கு சென்று பயன்பெறுங்கள்.
/ springfieldwellnesscentre
/ drmaran
/ springfieldwellnesscentrechennai
/ springfield-wellness-centre
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: