கம்ப்யூட்டரை உடைத்து வழக்கறிஞர்கள் போராட்டம்
Автор: Star News Tamil
Загружено: 2025-12-17
Просмотров: 226
இ பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி
வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி, கணினியை
உடைத்துப் போராட்டம்
திருச்சி நீதிமன்றம் முன்பு இன்று பரபரப்பு
நீதிமன்றங்களில் இ -பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதை கண்டித்தும், அதற்கான கட்டமைப்புகளை செய்து கொடுத்த பின்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும்,
இ -பைலிங் செய்வதற்கு ஏராளமான சேவை மையங்களை தொடங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்
வழக்கறிஞர்கள் கடந்த இரண்டாம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று இ ஃபைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கம்ப்யூட்டர் மானிட்டரை தூக்கிப்போட்டு உடைத்தனர்.இதனால் நீதிமன்றம் முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்துக்கு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் முத்துமாரி தலைமை தாங்கி பேசினார்.
துணைத் தலைவர் வடிவேல்சாமி, உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
#ஆர்ப்பாட்டம்
#போராட்டம்
#நீதிமன்றம்
#இ-பைலிங்
#வக்கீல்
ஸ்டார் நியூஸ் சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) செய்து ஷேர் செய்து ஆதரவு அளிக்குமாறு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: