எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்க பொன்மலை பணிமனை லோகோ கிளை கூட்டம்
Автор: Star News Tamil
Загружено: 2025-12-04
Просмотров: 236
எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே சங்கத்தின் பொன்மலை பணிமனை லோகோ கிளை செயற்குழு கூட்டம் பொன்மலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், லோகோ கிளையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பொன்மலை பணிமனையில் பணியாற்றும் ரெயில்வே தொழிலாளர்களுக்கான குறைகள் குறித்தும் அவற்றை சரி செய்ய எடுக்கும் நடவடிக்கைகள குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் ரெயில்வே துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ரயில்வேயில் தனியார் மயம் கூடாது, பொன்மலைப்பணிக்கு தரம் வாய்ந்த உதிரி பாகங்களை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் ரெயில்வே துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என வீரசேகரன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: