பிரமிக்கவைக்கும் பிறன்மலை கள்ளர் வரலாறு !! நாட்டாமையே தீர்ப்பை மாற்றமுடியாது !! | Thidiyan Malai
Автор: Cheral
Загружено: 2025-01-03
Просмотров: 935
பிரமிக்கவைக்கும் பிறன்மலை கள்ளர் வரலாறு !! நாட்டாமையே தீர்ப்பை மாற்றமுடியாது !! | Thidiyan Malai Travelling Video
திடியன் மலை வரலாறு மற்றும் முக்கியத்துவம்:
திடியன் மலை, தமிழ்நாட்டின் மதுரை அருகே அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற புனித மற்றும் வரலாற்றுச் சின்னமாகும். இதன் சார்ந்த புராணங்கள் மற்றும் மத முக்கியத்துவம் இதை வரலாற்று ஆர்வலர்களுக்கும் பக்தர்களுக்கும் முக்கிய இடமாக ஆக்கியுள்ளது.
பிறமலைக்கள்ளர் என்போர் மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் வாழ்ந்து வரும் கள்ளர் இனக்குழுமத்தைச் சேர்ந்தோராவர்.
இப்பகுதியில் உள்ள ஆனையூர் கிராமம், பாண்டியர் ஆட்சிகாலம் முதல் இப்பகுதிக்கான வருவாய் தலைமையகமாக (Revenue Head Quarters) இருந்தது. அதனால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்தகள்ளர்கள் ஆனையூர் கள்ளர்கள் எனப்பட்டனர்.
கி.பி.8 ஆம் நூற்றாண்டில் கள்ளர்கள் இப்பகுதியில் வந்து குடியமர்ந்தனர் எனவரலாற்றாசிரியர் ஆர். கே. கண்ணன் குறிப்பிடுகின்றனர். 11 ஆம் நுற்றாண்டுகளில் பாண்டிய தேசம் சோழர்கள் ஆட்சிக்குப் உட்பட்டிருந்த போது பாண்டிய தேசத்தில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதன் பொருட்டு தஞ்சையில் இருந்து தமது சமுக கள்ளர்களை கொண்டு வந்தனர். இவர்களை நாகமலை, ஆழகர் மலையில் கோட்டை கட்டிக்குடியமர்த்தினர் என்பர். ஆனால் இந்த பகுதியின் பூர்வ தொல் பழங்குடி மக்களுக்கான பாரம்பரிய கலாச்சார அடையாளங்களுடன் பிறமலை கள்ளர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். M130y என்ற மரபணு அறிக்கை இம்மக்களை தொல்குடிகள் என்று ஆய்வு பூர்வமாக நிறுபிக்கிறது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே திடியன் பகுதி குறிப்பிட்டப்படுகிறது. திடியன் கூட்டத்தினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
கி.பி 1655 இல் உரப்பனூரைச் சேர்ந்த திருமலை பின்னத்தேவன் என்பவரைப் இப்பகுதியின் தலைவராகப் பட்டங்கட்டி திருமலைநாயக்கர் ஒரு பட்டயத்தை வழங்குகின்றார்.
பிரமலைப்பகுதி இராஜதானி, எட்டுநாடுகள், 24 உபகிராமங்கள் என மூன்று அடுக்குகளாக அமைந்துள்ளது. இதன் தலைமைக் கிராமம் ராஜதானி என அழைக்கப்படுகிறது. இவ்வகை அமைப்பு எக்காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதனை அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை. இந்த எட்டுநாடுகள் உருவாக்கப்பட்டபின்பு புதிதாக உருவானகிராமங்கள் அவற்றிற்குத் துணைகிராமங்கள் என்ற வகையில் உபகிராமங்களாக அடுத்த நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம்.
பிறமலைப்பகுதி, எட்டுநாடுகளாகவும் இருபத்திநான்கு உபகிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பிறமலைப் பகுதி திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர், பாப்பாப்பட்டி, கொக்குளம், வேப்பனூத்து, தும்மக்குண்டு என எட்டு நாடுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரிலேயாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆர்.ஜே மூர் என்பவர் தெற்காசியாவில் உள்ள நாடுகளின் பண்டைய அரசகட்டமைப்பு, அரசியல், பண்பாடு, கலாச்சாரம் முதலான ஆய்வுகளை தன்னுடைய புத்தகத்தில் பல ஆதாரங்களோடு இனைத்துள்ளார்
அதாவது இந்த தன்னரசு கள்ளர் நாடுகள் 8 நாடுகளாகவும் அந்த நாடுகளுக்கு தேவர் பட்டம் கொண்ட ஒரு மன்னரும் அந்த மன்னருக்கு கீழ் 3அமைச்சர்களும், அந்த 3அமைச்சரின் கட்டுப்பாட்டில் நாட்டு மக்களும் இருந்துள்ளனர்.
பொதுவாக 24 உபகிராமங்கள் என்று சொல்லப்பட்டாலும், எந்தெந்தக் கிராமங்கள் அதில் உள்ளடங்கும் என்பதில் வேறுபட்ட பட்டியல்கள் தரப்படுகின்றன. இதில் ஆரியப்பட்டி கோடாங்கி பெரிய பெருமாள்தேவர் ஒருபட்டியலையும், முத்துத்தேவர் ஒரு பட்டியலையும், டூமண்ட் ஒருபட்டியலையும் தருகின்றனர்.
1. விக்கிரமங்கலம்,
2. நாட்டார்மங்கலம்,
3. வகுரணி,
4. காளப்பன்பட்டி,
5. மானூத்து,
6. அல்லிக்குண்டம்,
7. பொசுங்குநகரம்,
8. பிச்சங்குளம்,
9. சாத்தங்குடி,
10. வடபழஞ்சி,
11. சாக்கிலிப்பட்டி,
12. தோப்பூர்,
13. கப்பலூர்,
14. தனக்கன்குளம்,
15. விளாச்சேரி,
16. வடிவேல்கரை (கீழக்குயில்குடி)
17. சூடாபுளியங்குளம்,
18. பன்னியான்,
19. தாராப்பட்டி,
20. மேலக்கால்,
21. கச்சிராப்பு,
22. காடுபட்டி,
23. அய்யனார்குளம்,
24. கொடிக்குளம்.
உண்மையில் கள்ளர்கள் மதுரையின் பூர்வ தொல்குடியினர் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளது. அவை காலத்தின் அடிப்படையில் சற்று பார்ப்போம்.
பிறமலை கள்ளர்கள் ஆதியில் இருந்து இந்த பகுதியில் இருந்த தொல்குடிகள் என்பதற்கு ஆதாரமாக அவர்களின் நாட்டமைப்பு ஊர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Religious Importance:
The Kailasanathar Temple at the base of Thidiyan Malai is a significant pilgrimage site. The temple is unique in Tamil Nadu for housing Lord Dakshinamurthy along with 14 Siddhas, whose idols were brought from Kashi. The temple's sacred tree, known as Neikotta Maram, is considered auspicious for worship by individuals born under all 27 stars.
DINAMALAR TEMPLE
Cultural Aspects:
The village of Thidiyan, situated near the hill, is rich in cultural heritage. The area is known for its traditional practices and the preservation of local legends. The community actively engages in protecting the natural environment of the hill, planting saplings, and maintaining the greenery, reflecting their deep connection to the land.
VIKATAN
Natural Environment:
Thidiyan Malai is surrounded by lush greenery, with various species of flora and fauna. The hill offers opportunities for trekking and bird watching, attracting nature enthusiasts. The presence of ancient trees, such as the sacred Neikotta Maram, adds to the ecological significance of the area.
VIKATAN
In summary, Thidiyan Malai is a place where history, religion, culture, and nature converge, making it a noteworthy destination for pilgrims, historians, and travelers interested in exploring the rich heritage of Tamil Nadu.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: