கருப்பசாமி பாடல்கள் || KARUPPASWAMY PAADALGAL||
Автор: VejayAudios
Загружено: 2018-07-03
Просмотров: 180402
கருப்பசாமி பாடல்கள் || KARUPPASWAMY PAADALGAL||
SUNG BY PUSHPAVANAM KUPPUSWAMY
PRODUCED BY : G.JAGADEESAN
SUBSCRIBE TO OUR CHANNEL : • கருப்பசாமி பாடல்கள் || KARUPPASWAMY PAADAL...
கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாக நாட்டார் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக உள்ளார்.
கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.[1]
மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளார். வைணவ சமயத்தின் பெருமாளாக சிறுதெய்வ வழிபாட்டில் கொண்டாடப்படுகிறார். சில சிறுதெய்வக் கோயில்களில் கிருஷ்ணரின் உருவ அமைப்போடு உள்ளார். வைரிசெட்டி பாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் முத்து கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள், மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது.
சங்கிலி கருப்புசாமி மிகவும் உக்ரம் கொண்டவராகவும், அவரை அடக்க பல்வேறு யாகங்களும், பலிகளும் இட்டு சங்கிலியால் பிணைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். தடித்த சங்கிலியால் பிணைக்கப்பட்டு கருப்புசாமி உள்ளார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: