ஷீரடிக்கு போகலாம் வாங்க | Sai mahima
Автор: Gopuram Tv
Загружено: 2025-11-14
Просмотров: 3297
#shirdisaibaba #saibaba #baba #shirdi #shirdisaibabadevotees #prasadganesh #saimahima #saibabashirdi
ஓம் சாய் ராம் 🙏
சீரடியில் சாய் மஹிமா அன்ன சேவா மூலம் பிரதானமாக அன்னதான சேவை செய்து வருவது குறித்து எல்லா பக்தர்களும் அறிவீர்கள்.
இது பாபாவின் அருளால் தினந்தோறும் தொடரும் ஒரு தெய்வீக பணியாகும்.
அதே நேரத்தில், பாபாவின் கருணையால் நாங்கள் டிராவல்ஸ் மற்றும் கைய்டு சேவையையும் செய்து வருகிறோம் என்பதை அறிந்திருக்க மாட்டீர்கள்..
பக்தர்களுக்கு அனைத்து வசதிகளுடனும், பாபாவின் தரிசனம் நிம்மதியாக கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.
சீரடியில் A to Z சேவைகள் என்று கூறப்படும் அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம்.
பக்தர்கள் விமான நிலையத்திலிருந்து வருகை தரும் தருணம் முதல், சீரடி தரிசனம் முடிந்து மீண்டும் விமான நிலையம் கொண்டு சேர்க்கும் வரை என்று ஒவ்வொரு நிகழ்வும் பாபாவின் திருவருள்படி சீராக நடைபெற நாங்கள் முழு பொறுப்பும் ஏற்றுக்கொள்கிறோம்.
பக்தர்களின் ஆன்மிக நலனை முன்னிட்டு, பாபாவின் தெய்வீக தரிசனம் அமைதியாகவும், ஆனந்தமாகவும், திருப்திகரமாகவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சாய் மஹிமா குழுவினரால் அன்புடனும், அர்ப்பணிப்புடனும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
நாங்கள் ஒரு அருமையான, பக்தி நிறைந்த குழுவை வைத்துள்ளோம்.
பாபாவின் சமாதி மந்திர் (உள் மற்றும் வெளிப்புறம்), அவுரங்காபாத்தில் உள்ள மேங்கோ ட்ரீ, நாசிக் மற்றும் சீரடியில் உள்ள அனைத்து பிரசித்தி பெற்ற தலங்களுக்கும் பக்தர்களை அழைத்துச் சென்று பாபாவின் அருளைப் பெறச் செய்வது எங்கள் பாக்கியமும்,... பாபாவின் உத்தரவுமாகும்..
இதனுடன், ஹிமாச்சல், காசி, வாரணாசி போன்ற தெய்வீக யாத்திரை தலங்களுக்கும் சிறப்பு சுற்றுலா ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் எந்த விதத்திலும் கவலைப்படத் தேவையில்லை... பாபாவின் அருளால், அனைத்து ஏற்பாடுகளையும் நாங்களே அன்புடனும், பொறுப்புடனும் செய்து கொடுக்கிறோம்.
சீரடி வரும் சாய் பக்தர்களுக்கு பாபாவின் தெய்வீக அருளும், ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும் என்று சாய் மஹிமா அன்ன சேவா குழுவினர் பாபாவிடம் மனுதார பிரார்த்தனை செய்கிறோம்..
மேலும் தகவல்களுக்கு சாய் மஹிமா அன்ன சேவா குழுவினரை அணுகும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
ஜெய் சாய்ராம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: