அய்யா வைகுண்டர் உபதேசம் | Ayya Vazhi song | Akilathirattu Ammanai | Siva Anandan
Автор: Siva Anandan | Ayya Vazhi Song
Загружено: 2025-12-16
Просмотров: 4700
அய்யா வைகுண்டர் உபதேசம்:
என்னை அறியாமல் எதுவகையும் உலகில்லை,
தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய் மகனே!
பொறுமை பெரிது பெரிய திருமகனே,
தர்மம் பெரிது தாங்கியிரு என்மகனே!
தாழக்கிடப்பாரைத் தர்க்காப்பதே தர்மம்!
அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே.
கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே!
விளக்கு ஒளி போலே வீரத்தன மாயிருங்கோ!
நல்ல நினைவோர்க்கு நாளெத்தனை ஆனாலும்
பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார்!
ஆணும் பெண்ணும் கூடி ஆசாரம் செய்திடுங்கோ!
தானதர்மம் செய்திடுங்கோ தழைப்பீர்கள் நீங்கள் மக்காள்!
இல்லறத்தை விட்டு தவம் இல்லைகாண் வேறொன்றும்!
நடுத்தீர்ப்பு கேட்பதற்கு நாள் அடுத்து வருகுதப்பா,
பள்ளி கணக்கணிடம் பாடம் கேட்க வாறேனடா!
பக்தி மறவாமல், பதறாமல் நீயிருந்தால்
புத்தி சொல்ல நான் வருவேன்!
தெரியார்க்கு உபதேசம் செப்பியிரு என் மகனே!
இன்று முதல் எல்லோரும் ‘இகபரா தஞ்சமென்று’
ஒன்று போல் எல்லோரும் ஒருபுத்தியாய் இருங்கோ!
சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும்
நட்டங் காணாத நாடாள்வாய் என்மகனே!
கோபத்தைக் காட்டாதே, கோளாடு இணங்காதே! பாவத்தைக் காணாதே! பகட்டுமொழி பேசாதே!
நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர்!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: