#13 - உச்சிஷ்ட உபதேசம் | Yogi Ramsuratkumar | Ma Devaki | 17-10-25
Автор: Yogi Ramsuratkumar
Загружено: 2025-10-16
Просмотров: 2389
இது திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின் யூ-ட்யூப் சேனல். இந்த சேனலில் தினமும் காலை 6:00 மணி மற்றும் மாலை 6:15 மணிக்கு மா தேவகி மாதாஜி அவர்கள் வழிநடத்த, பக்தர்கள் பின் இசைக்கும் பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாரின் நாம சங்கீர்த்தனம் ஒளிபரப்பாகிறது. மேலும், இந்த சேனலில் பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் பற்றிய காணொளிகள், ஆசிரம நிகழ்ச்சிகள், நாம கீர்த்தனைகள், ஆசிரம பாடல்கள் மற்றும் சத்சங்கங்களின் வீடியோக்கள் உள்ளன.
00:00:00 யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராய நாம சங்கீர்த்தனம்
01:00:00 உச்சிஷ்ட உபதேசம் - #13
தந்தை ஒருவரே இருக்கிறார். வேறு எவரும் இல்லை. வேறு எதுவும் இல்லை
யோகி ராம்சுரத்குமார் தன்னை பெரிதும் வெளிப்படுத்திக் கொள்ளாது, திருவண்ணாமலை வீதிகளில் ஒரு பிச்சைக்காரனைப் போல் வாழ்ந்த ஒரு பெரிய மகான். சிறு வயதிலிருந்தே ஆன்மிக நாட்டமும், பல இறை அனுபவங்களும் பெற்ற அவர், குரு மற்றும் இறை தேடலின் காரணமாக தென்னிந்தியாவிற்குப் பயணம் செய்தார். இங்கு, தனது மூன்று குருக்களையும் சந்தித்தார்: ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ரமண மகரிஷி, மற்றும் பப்பா ராம்தாஸ் அவர்கள். பப்பா ராம்தாஸ், அவருக்கு "ராம நாம" தீட்சை அளித்தார். ஏழு பகல் மற்றும் ஏழு இரவுகளில், ராம நாமத்தை இடை விடாது ஜபித்த ராம்சுரத்குமார், மனிதத் தன்மையிலிருந்து அமரத்தன்மை அடைந்தார். ராம்சுரத்குமார் இப்போது “யோகி ராம்சுரத்குமார்” ஆனார். அந்த தருணத்திலிருந்து, அவரது பணி தனது முக்தியோடு நில்லாது, மிகப் பெரிய உலகளாவிய பணி ஆயிற்று.
இன்று, “யோகி ராம்சுரத்குமார்” என்று உச்சரிக்கும் அனைவருக்கும் உதவி, வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பை அவரது நாமம் அளிக்கிறது. மேலும் அவரின் நாமம் அமைதி, அன்பு மற்றும் ஆனந்தத்தின் இருப்பிடமாய் உள்ளது.
#yogiramsuratkumar #madevaki #mahatma #ram #guru #bhakti #satsang #meditate #om #omsriram #peace #bliss #chanting
ஆசிரம இணையதளம்: : www.yogiramsuratkumarashram.org
© All Rights Reserved, Yogi Ramsuratkumar Ashram, Tiruvannamalai.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: