Origin of I for tamil -Thirunadhar kundru | Mr.DK
Автор: Mr.DK
Загружено: 2024-03-16
Просмотров: 2567
Join this channel to get more benefits:
/ @mrdk16
follow me on
/ devakannadasan
google map
https://www.google.com/maps/place/Shr...
திருநாதர் குன்றுகள், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக் கோட்டைக்கு வடக்கே உள்ளது. இம்மலையை சிறுகடம்பூர் மலையென்றும், இப்பகுதியை சிம்மபுரி என்றும் அழைப்பர். திருநாதர் குகைக் குன்றுகளில் கிபி 4 - 5-ஆம் நூற்றாண்டுகளில் சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலை இரண்டடுக்குச் சிற்பங்களும், முதிர்ந்தநிலை பிராமி எழுத்துமுறையிலிருந்து, வட்டெழுத்தாக தமிழ் எழுத்துகள் வளர்ந்த, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இங்குதான் முதன்முதலில் காணப்படுகிறது.[1] [2]இச்சமணத் தலத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கிறது.
மலையின் சிறப்பாக, ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து, திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதலில் காணப்பட்டது..இதனால் இம்மலை தமிழுக்கு எழுத்து தந்த மலை எனும் சிறப்பு பெற்றது. . இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்கிறது. மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறது. சமீபத்தில் காணப்பட்ட கல்வெட்டு கோயிலில் விளக்கேற்ற நானூறு ஆடுகள் தானம் தரப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: