ஊத்து 2019
Автор: Rajakrishnan Kalaichelvan
Загружено: 2021-02-21
Просмотров: 79
நான், எனது நண்பர் ஜுஜித் மற்றும் அண்ணன் முருகன் மூவரும் எங்கள் ஊர் திருநெல்வேலி அருகில் உள்ள தேயிலை தோட்டமான மாஞ்சோலை&ஊத்து&க்கு சென்றோம். இதன் சிறப்பு இயற்கை உரமிட்டு வளர்க்கும் தேயிலையும் உண்டு. காலை திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு கல்லிடைக்குறிச்சியில் 7.30 மணிக்கு வந்து இறங்கினோம். பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் ஒரு சிறிய சிற்றுண்டி கடை இருந்தது. அதில் ஒரு அக்கா எங்களை வாஞ்சையோடு வரவேற்று சூடாக ஆப்பம், இட்லி, பூரி, பொங்கல் வடை இருக்கிறது. எது வேண்டும் என்று இன்முகத்துடன் பரிமாறினார்கள். நாங்களும் சிற்றுண்டியை முடித்து எங்களுக்கு பேருந்து 8.15 மணிக்கு வந்தது. அங்கு செல்வதற்கு சிற்றுந்து தான். நாங்கள் ஓட்டுநருக்கு பின் இருக்கையில் எங்களுக்கு இருக்கை கிடைத்தது. 8.30 மணிக்கு கிளம்பினோம். முதலில் வனத்துறை எல்கையை கடந்தோம். சிறிது நேரத்தில் மணிமுத்தாறு அருவி வந்தது. அதை கடந்து மேற்கு தொடர்ச்சி மலையில் பயணப்பட்டோம். ஒருமணிநேரம் பயணத்திற்கு பின் மாஞ்சோலை என்கிற ஊர் வந்தது. அங்கு தேநீர் மற்றும் சூடாக வெங்காய வடை சாப்பிட்டோம். பின் அங்கிருந்து கிளம்பி ஊத்து சென்றடைந்தோம். எங்களுக்கு அந்த ஊர் மக்களுடன் பிரயாணிக்கும் போது ஒருவித அன்புடனும் பாசத்துடனும் எங்களுடன் பேசிக்கொண்டே வந்தார்கள். அங்கு எங்களுக்கு பாசத்திற்குரியவரும் மிகவும் முக்கியமான நண்பருமான காசிம்பாய். மதிய உணவு அவரே ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அவர் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். பின் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு நாங்கள் மற்றும் காசிம்பாயுடன் இரவில் ஊத்து தேயிலை தோட்டத்தை சுற்றிப் பார்த்தோம். வழிநெடுகிலும் ஒருவிதமான அமைதி. ஆங்காங்கே வண்டு சத்தங்கள். இதில் அவ்வப்போது காசிம்பாய் டார்ச் லைட் அடித்து காண்பிப்பார். எப்பவாது சிறிது தூரத்தில் காட்டு எருமை அல்லது மிளா நிற்கும். ஒளி பட்டவுடன் கண்கள் மின்னும். அதன் கண்களை வைத்துதான் நாம் பார்க்க முடியும். சுமார் இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டே நடந்திருப்போம். காசிம்பாய் அவ்வப்போது சார் இங்குதான் புலி வரும், யானை திடீர் என்று நிற்கும் என்பார். ஒரு வித பயத்துடனே நாங்கள் தங்கும் இடத்திற்கு இரவு 1.30 மணியளவில் வந்துசேர்ந்தோம். மறுநாள் காலை 7.30 மணிக்கு நாங்கள் காசிம்பாய் நண்பர் திரு.ராஜேந்திரன் அவர்களுடன் லுக்அவுட் என்ற இடத்திற்கு சென்றோம். அங்கிருந்து பார்த்தால் பாபநாசம் & காரையார் அணை. அதற்கு நேர் பின்புறம் நாங்கள் நின்று பார்க்கிறோம். அங்கிருந்து பார்த்தால் தாமிரபரணி உற்பத்தியாகிற பொதிகை மலை. இவையெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மனத்திற்கு மிகவும் இதமாகவும் அமைதியாகவும் இருந்தது. அங்கேயே சுமார் இரண்டு மணிநேரம் இருந்துவிட்டு மதிய சாப்பிட்டிற்கு வந்தோம். மதியம் சாப்பாட்டை முடித்து விட்டு அங்கேயே சிறிது உலாவினோம். அங்கிருந்த இரண்டு நாட்களும் அங்குள்ள மக்கள் எல்லோருமே அன்பாக பழக கூடியவர்கள். எங்களுக்கு 4.00மணிக்கு பேருந்து வந்தது. காசிம்பாய் எங்களை வழியனுப்பினார். நீங்கா நினைவுகளுடன் அங்கிருந்து கிளம்பினோம். என்றும் மறக்கமுடியாத நண்பர் காசிம்பாய்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: