Kodaganallur Kailasanathar Temple Sevvai Dosham கோடகநல்லூர் கைலாசநாதர் ஆலயம் செவ்வாய் தோஷ பரிகாரம்
Автор: Seerudaiyan
Загружено: 2021-06-06
Просмотров: 3269
#Seerudaiyan #Kodaganallur #kailasanathar #Nandhi #கோடகநல்லூர் #கைலாசநாதர் #நந்தி
நந்திக்குத் தாலி பெண்ணுக்குத் திருமணம் Kodaganallur Kailasanathar Temple
நந்திக்குத் தாலி பெண்ணுக்குத் திருமணம்
கோடகநல்லூர் கைலாசநாதர் ஆலயம்
நவகைலாயம் என்று ஒன்பது சிவன் கோயில்கள் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகங்களுக்கு உரியவைகளாக கருதப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவகைலாயங்கள்முரப்பநாடு ஸ்ரீவைகுண்டம் தென்திருப்பேரை இராஜபதி சேந்தன்பூமங்கலம்
நான்கு கோவில்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. குன்னத்தூர், கோடகநல்லூர், சேரன்மாதேவி, பாபநாசம்
ஒன்பது நவக்கிரக திருத்தலங்களில் மூன்றாவது நவக்கிரக தலமான செவ்வாய்க்குரிய தலம் ,கோடகநல்லூர் கைலாசநாதர் ஆலயம்
கோடகநல்லுர் திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவிக்கு செல்லும் வழியில் 15கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
மூலவர் : கைலாசநாதர்
அம்மன்/தாயார் : சிவகாமி, அனந்தகவுரி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : தாமிரபரணி
தலபெருமை:
கொடிமரம், பலிபீடம், பரிவார மூர்த்திகள் என எதுவுமே இல்லாத வித்தியாசமான கோயில் இது.
இங்கு சுவாமியே பிரதானம் என்பதால்
இந்த அமைப்பில் இருப்பதாக சொல்கிறார்கள்.
துவாரபாலகர்களின் இடத்தில் கல்யாணவிநாயகர், முருகன் இருக்கின்றனர்.
நவ கைலாய தலங்களிலேயே பெரிய மூர்த்தி இவர்.
சிவகாமி அம்பாளுக்கு தனிச்சன்னதி இருக்கிறது.
மனித வாழ்க்கையில் செவ்வாய் திசை ஏழு ஆண்டுகள் நடக்கும்.
பெண்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் நடக்க தாமதமாகும் என்பதுண்டு.
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகும்
சுவாமிக்கு துவரம்பருப்பு நைவேத்யம் படைத்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் செவ்வாய்தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
தாலியுடன் நந்தி: .
பெண்கள், 58 விரலிமஞ்சளை, தாலிக்கயிற்றில் கட்டி,இங்குள்ள நந்திக்கு, மாலையாக அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் வரன் அமையும் என நம்புகிறார்கள்.
இக்கோயிலில் ஐந்துதலை நாகத்தின்கீழ் நின்ற நிலையில் காட்சி தரும் அனந்தகவுரியின் சிலை உள்ளது.
இவளை, "சர்ப்பயாட்சி', "நாகாம்பிகை' என்றும் அழைக்கிறார்கள்.
சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷ நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கோடகநல்லூர் - 627 010, திருநெல்வேலி - மாவட்டம் .
போன்: +91- 99659 23124
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: