🦚
Автор: சஷ்டி நாராயணன் (கந்தன்)
Загружено: 27 мар. 2025 г.
Просмотров: 377 264 просмотра
#shanmugha Kavasam#pambanswamigal #Shanmuga Kavasam #"Padmashri" "Isaimani" Dr. Sirkali
Govindarajan
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
சண்முக கவசம்
பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது சண்முக கவசம். இந்த பாடலை பிழை இல்லாமல், நம்பிக்கையுடன் தொடர்ந்து படித்து வந்தால் தீராத நோயையும் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தது. இது மெய், உயிர் இரண்டையும் கவசம் போல் இருந்து காக்கக் கூடியதாகும்.
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (Shanmuga kavasam). அண்டமாய் அவனியாகி பாடல் வரிகள். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஷண்முக கவசம் பாடல் காணொளிக்கு கிழே சண்முக கவசம் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது... ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து - 12, மெய் எழுத்து - 18).
ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு. இது உலகத்தின் நோய் மருந்து இதை கண்டிப்பாக தினமும் விடியல் காலையும் மாலையும் கண்டிப்பாக கேட்கவும்...

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: