3 மாநில முதல்வர்களுக்கு மாவோயிஸ்டு அமைப்பு கடிதம் | Maoists' announcement | Maoist organization
Автор: Dinamalar
Загружено: 2025-11-24
Просмотров: 1973
#Partnership மகாராஷ்டிரா, ம.பி., சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம், அட்டகாசம் அதிகரித்தது.
அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவித்தனர்.
மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரம் அடைந்தது.
ஓராண்டில் மட்டும் 287 நக்சல்கள் கொல்லப்பட்டனர்; 1,000க்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்ற 18ம் தேதி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இது மாவோயிஸ்ட் அமைப்புகளுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதேசமயம் அரசு கோரிக்கையை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் உட்பட பல நக்சல் அமைப்புகளை சேர்ந்த முக்கிய நபர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவது தொடர்கிறது.
இது போராடி வரும் மாவோயிஸ்ட் அமைப்புகளை மேலும் பலவீனப்படுத்தி உள்ளது.
#Maoists | #Maoistorganization | #Naxals | #CentralGovt# #Maoists #Maoistorganization #Naxals #CentralGovt
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: