திருக்காமேஸ்வரர் திருக்கோவில் | ஐஸ்வர்ய மகாலட்சுமி
Автор: Giant Blue Media
Загружено: 2025-07-10
Просмотров: 139
1300 Year Old Thirukameswarar Temple Vellur | Trichy District |திருக்காமேஸ்வரர் திருக்கோவில் | ஐஸ்வர்ய மகாலட்சுமி.
1300 வருடம் பழமை வாய்ந்த வெள்ளூர் திருக்காமேஸ்வரர் திருக்கோயில் வெள்ளூர் , திருச்சி மாவட்டம் , தமிழ்நாடு, இந்தியா.
Vellur Thirukameeswarar Temple Trichy
ஐஸ்வர்ய மகாலட்சுமி தனி சமையல்
Thirukameshwara Thirukovil , Vellur , Trichy District :
திருச்சி மாவட்டம் வெள்ளூர் அருகே முசிறியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருக்காமேஸ்வரர் திருக்கோவில்.
இந்தக் கோவிலில் இருக்கும் மூலவரான திருக்காமேஸ்வரர் ஐ மகாலட்சுமி பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டது.
பாற்கடல் கடையும் பொழுது சிவபெருமானை நோக்கி பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து ஐயப்பன் அவதரித்தார். இதை அறிந்த மஹாலக்ஷ்மி தேவி பெருமாளிடம் கோபித்துக்கொண்டு வைகுண்டத்தை விட்டு வெளியேறி வெள்ளூரில் இருக்கும் இந்த கோவிலில் வில்வ மரமாக மாறி தனக்கு நியாயம் கேட்டு சிவபெருமானை நோக்கி பூஜித்தாள்.சிவபெருமான் மகாலட்சுமியின் முன்பு தோன்றி மோகினி அவதாரத்தின் சிறப்பை எடுத்துக் கூறி திருமாலையும் மகாலட்சுமியும் சேர்த்துவைத்து மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த கிரீடம் கொடுத்து ஐஸ்வர்ய மகாலட்சுமி என்கின்ற பட்டத்தை வழங்கினார்.
போகர் தனது 7000 என்கின்ற நூலில் கோவிலில் சிவபோக ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்து பூஜித்த பின்பே பழனியில் நவபாஷான ஸ்ரீ தண்டாயுதபாணி பிரதிஷ்டை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.இழந்த தன் கணவன் மன்மதன் ரதி தேவி மீட்டெடுத்த கோவில் இதுவே.
நகை வியாபாரம் செய்யும் செய்வோம் இக்கோவிலுக்கு சென்று பூஜை செய்து வர ஐஸ்வர்யம் பெருகும் என்றும் மாணவர்கள் படிப்பில் மேலோங்கி சிறக்க இக்கோவிலில் இருக்கும்.
நகை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இக்கோவிலில் சுக்கிர ஓரையில் ஐஸ்வர்ய மகாலட்சுமி பூஜித்து வர ஐஸ்வர்யம் பெருகும் என்றும். தன் ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் அடைந்து இருப்போரும் இக்கோவிலுக்கு வந்து சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை 16 வகை தீபங்கள் பதினாறு செந்தாமரை களுடன் வில்வ மரத்து உடன் சேர்த்து பூஜித்து வர அவர்கள் ஐஸ்வர்யத்துடன் வாழ்வர் என்று கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த இக்கோவிலுக்கு சென்று பக்தர்கள் அனைவரும் அருள் பெற வேண்டுகிறேன் நன்றி வணக்கம்.
Thiru Kameshwarar Temple in Villianur | Pondicherry | Must Visit Destination In Pondicherry
Aishwarya mahalakshmi Kovil Thirukameshwara temple Vellur ஐஸ்வர்ய மகாலட்சுமி திருக்கோவில் திருச்சி
Location:
https://www.google.com/maps/place/Ish..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: