வித்தகா விநாயகா விநாயகர் பக்தி பாடல் Vithaga Vinayaga Tamil Devotional Song
Автор: Kathiravan Tamizh Isai
Загружено: 2024-04-13
Просмотров: 112151
விநாயகர் பக்தி பாடல்
Vinayagar Devotional Song
Production : Kathiravan Tamizh Isai
Singer : V.M.Mahalingam
Music : V.M.Mahalingam
Lyrics : Va Karuppan
Percussion : Kumar
Nathswaram : Bala
Flute : Sathish
Mix & Master : Sivakumar
Camera : Terry
Edit : Tenny
Recording Studio : 2Keys
Lyrics:
பல்லவி:
வித்தகா விநாயகா
வேழ முக ஆண்டவா
கற்றவா கணநாவா
ஆறு முக மூத்தவா
வித்தகா விநாயகா
வேழ முக ஆண்டவா
கற்றவா கணநாவா
ஆறு முக மூத்தவா
நீ இருக்க பயம் இல்லை
நிம்மதியும் குறைவில்லை
கணபதி என்ற சொல்லை
கதைத்திட நோய் இல்லை
நீ இருக்க பயம் இல்லை
நிம்மதியும் குறைவில்லை
கணபதி என்ற சொல்லை
கதைத்திட நோய் இல்லை
வித்தகா விநாயகா
வேழ முக ஆண்டவா
கற்றவா கணநாவா
ஆறு முக மூத்தவா
சரணம் 1
மார்கழி கோலமிட்டு
மனிதநேயம் வேண்டினோம்
ஆதிசிவ பூசைசெய்து
அன்புக்காக ஏங்கினோம்
ஆசையில் வாழ்க்கைகெட்டு
அமைதியாவும் போனதே
ஐங்கரனின் பாதம்தொட
நன்மையாவும் கூடுதே
யானைக் கொம்பன் தேடிவந்தால்
மனக்கவலை தீர்ந்திடுமே
வேண்டிநீயும் வாடிநின்றால்
விருப்பமது சேர்ந்திடுமே
காவல்தெய்வம் கரிமுகனை
கையெடுத்து வணங்கிடுவோம்
ஆதிசிவனின் அரியவனை
மெய்சிலிர்த்து வேண்டிடுவோம்
வித்தகா விநாயகா
வேழ முக ஆண்டவா
கற்றவா கணநாவா
ஆறு முக மூத்தவா
சரணம் 2
வாசலில் வேண்டிநிற்க
வந்துநிற்பான் கணபதி
ஆனைமுகனின் பேரைத்தொட்டு
வேலைதனை அனுமதி
அற்புத ஞானமொழி
ஆற்றல்தரும் அதிபதி
பொற்பாதம் தேடிவர
ஏற்றமிகும் வெகுமதி
வேசம்போடும் ஆசைகண்டு
நாசமிடும் பேரொளி
பாசம்கொண்டு நீயும்சென்றால்
வரம்கொடுக்கும் பிறையொளி
தேடிவந்தால் கோடி இன்பம்
அரசமரம் அற்புதமே
பூமி எங்கும் ஓதும் சங்கின்
அண்டவெளி பொற்பதமே
வித்தகா விநாயகா
வேழ முக ஆண்டவா
கற்றவா கணநாவா
ஆறு முக மூத்தவா
வித்தகா விநாயகா
வேழ முக ஆண்டவா
கற்றவா கணநாவா
ஆறு முக மூத்தவா
நீ இருக்க பயம் இல்லை
நிம்மதியும் குறைவில்லை
கணபதி என்ற சொல்லை
கதைத்திட நோய் இல்லை
நீ இருக்க பயம் இல்லை
நிம்மதியும் குறைவில்லை
கணபதி என்ற சொல்லை
கதைத்திட நோய் இல்லை
வித்தகா விநாயகா
வேழ முக ஆண்டவா
கற்றவா கணநாவா
ஆறு முக மூத்தவா
-----------------------------------------------------------------------------------------------------------------------
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: