மார்த்தாண்டத்தில் மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் மரணம்
Автор: Beniel TV
Загружено: 2025-06-27
Просмотров: 120745
#kanyakumari #benieltv #tamilnadu #viralvideo #breakingnews #news #newstoday #tamilnews #trending #marthandam #hospital #baby #delivery கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு அம்பலத்துவிளை பகுதியை சேர்ந்தவர் விபின், வயது27. பிஎஸ்சி நர்சிங் படித்த இவர், பாறசாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்மைலின், வயது25. இவர்களுக்கு கடந்த 10மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கர்ப்பிணியான ஸ்மைலின் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஸ்மைலினுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பெற்றெடுத்த நற்செய்தியை கணவருடன் செவிலியர் மகிழ்ச்சியாக தெரிவித்தனர். அப்போது அவர்கள் தாயும் சேயும் நலமாக உள்ளனர் என கூறியுள்ளனர். ஆனால் இந்த நற்செய்தியை அறிவித்த ஒரு துளி மணி நேரத்தில் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது குழந்தை பெற்றெடுத்த பெண் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர். அப்போது கணவர் சென்று பார்க்கும் போது, மனைவி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே மருத்துவமனை நிர்வாகம் அவரை ஆம்புலன்ஸ் மூலம் நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்மைலின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை பெற்றெடுத்த பெண் இறந்த செய்தி குடும்பத்தினருக்கு பேரிடியாய் அமைந்தது. பின்னர் இது குறித்து அவரது தந்தை மேல்புறம் வெங்ஙனாம்கோடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், மகள் அபாய கட்டத்தில் இருப்பதை முன்னதாகவே அவர்கள் தகவல் அளிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். எனவே இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: