மலையடிப்பட்டி கண் நிறைந்த பெருமாள் கோயில்|குடவரை கோயில்| Kan Niraintha Perumal Koil
Автор: ஆன்மீகத்துடன் நட்பு
Загружено: 2022-04-10
Просмотров: 17055
மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள் கோவில்.
ராமநவமி எங்களுடைய பயணம் மலையடிபட்டி என்ற இயற்க்கை எழில் சூழ்ந்த பகுதியில் உள்ள கண நிறைந்த பெருமாளை காண லேசான மழை சாரலுடன்....
வாங்க கோவில் பற்றி பார்ப்போம்...
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் வழியில் சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ள ஊர்தான் மலையடிப்பட்டி...திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் தூவாக்குடி காட்டூர் திருவெறும்பூர் கடந்து வரும் டோல்கேட் தாண்டிய உடன் இடது புறம் திரும்பினால் அங்கிருந்து 13 கிமீ மலையடிப்பட்டியை அடையலாம்...
சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் ஒரே குன்றின்மீது தனித்தனியே எழுப்பப்பட்டுள்ள இரு குகைக் கோயில்கள் உள்ளன. சிவனுக்குக் கோயில் எடுத்து ஈசனுக்கு `சத்ய வாகீஸ்வரர்' என பெயர்...இறைவி பெயர் பெரியநாயகி
ஒருகாலத்தில், 'திருமால் அடிப்பட்டி' என அழைக்கப்பட்டு, பின்னர் இந்த ஊர் 'மலையடிப்பட்டி' என மருவிஉள்ளது...அந்த ஊரில் குடிகொண்டுள்ளவர் தான் நம் கண் நிறைந்த பெருமாள்..சுமார் 2500 வருட பழைமை வாய்ந்த கோயில் இது. கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள்கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன.
திருமாலே மலை. அவர் அடியில் நம்மை சரணாகதி செய்து கொண்டு பட்டியில் அடைபட்ட ஆடு, மாடுகளாக இருப்பவர்கள் நாம். நமக்கு வேண்டுவனவற்றை அவ்வப்போது தந்து நம்மைக் காப்பவன் அவன் என்பதை உலகுக்கு உணர்த்துபவர் திருமலையடிப்பட்டி பெருமாள்.
இங்கு ஐந்து கோலங்களில் பெருமாளையும், எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும், கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சிதருகிறார்.
அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும், புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே தேவி- பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும், லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும், தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும், தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீபலட்சுமியுமாக எட்டு லட்சுமிகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்யலாம்!
திருமால் கண்மூடித் தூங்கும் பாவனையை அறிதுயில் என்பார்கள். கண் மூடி இருந்தாலும் நடக்கும் எல்லாச் செயலும் அவன் அறிந்தவாறே நடைபெறுகிறது என்பது இதன் பொருள். அரங்கருக்கு முன்புறம் உள்ள இரண்டு தூண்கள் “அரி நேத்ர தூண்கள்” என்றும் “திருநேத்ரத் தூண்கள்” என்றும் சொல்லப்படுகின்றன. நடைபெறும் அனைத்தையும் அந்தத் தூண்களின் வழியே அறிந்தவாறு திருமால் கண் துயில்கிறார் என்று சொல்லப்படுகிறது. நம் வருகை முதல், பிரார்த்தனைவரை அனைத்தையும் அந்தத் தூண்கள் மவுன சாட்சியாக நின்று பெருமாளிடம் பரிந்துரைத்துக்கொண்டிருக்கின்றன என்பது ஐதீகம்.
கோவிலை பற்றி எளிதில் நீங்க புரிந்து கொள்ள சொல்ல வேண்டும் என்றால் புதுக்கோட்டை அருகே உள்ள திருமயத்தில் இருப்பதைப் போலவே இங்குள்ள பெருமாள் காணப்படுகிறார்.அங்கு உள்ள பெருமாளின் மினியேச்சர் இங்கு எனலாம்...ஆம்.. குடவறை கோவில்..அங்கு உள்ளதை போலவே இங்கும் அருகிலேயே சிவாலயம் உள்ளது...
பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக மற்றும் பில்லி சூனயம் போன்றவற்றுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும் சரியானவுடன் தரிசனம் செய்து காணிக்கைப் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வதும் இங்கு மரபாக உள்ளது.
தங்களுக்கும் நேரம் இருக்கும் போது கண் நிறைந்த பெருமாளையும், சத்ய வாகீஸ்வரரையும் தரிசித்து விட்டு வாருங்கள்...
அமைவிடம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் கிள்ளுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது.
கோயில் Google map link
Kan Niraintha Perumal Koil
https://maps.app.goo.gl/YKpc3bVtbF7z7...
If you want to Support our channel via UPI ID
nava2904@kvb
Join our channel Whats app Group
https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...
தமிழ்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: