போலாமா வெளிநாடு | Polama Velinaadu - Thuva JB Chandran x Anton Rawshan
Автор: Thuva JB Chandran
Загружено: 2026-01-22
Просмотров: 535
இந்த பாடல் அரபு நாடுகளில் வேலை செய்யும் நம் வைரக் கட்டிகளுக்கு சமர்ப்பணம்
மற்றும் தங்கங்களுக்கு நன்றிகள் - "போலாமா வெளிநாடு" பாடலைக் காண வந்தமைக்கு 🙌🏻
🔗 https://linktr.ee/Thuvajbchandran
☝️🌍 One click to my world. ☝️☝️
எனக்கு பெரிய கூட்டமோ, பெரிய படக்குழுவோ இல்லை.
“முடியாது” என்று நிற்பதை விட முயற்சி செய்வது மேல்
ஒரு கைப்பேசி மட்டும் கொண்டு வீடியோ எடுத்து, அதையே எடிட் செய்து, இன்று உங்கள் முன் கொண்டு வந்துள்ளேன்.
பாருங்கள்… உங்கள் கருத்துகள் இருந்தால், கமெண்ட்களில் பதிவு செய்யுங்கள்.
I don’t have a big team or a big crew.
I’m not someone who stops at “I can’t” — I’m someone who keeps trying.
With just a mobile phone, I shot and edited this video and brought it to you today.
Watch it, and if you have any thoughts, please share them in the comments.
Touch with Thuva JB Chandran
Instagram: / thuva_jbchandran
Facebook: / thuvajbchandran
Spotify: https://open.spotify.com/artist/7jaNj...
Apple Music: / thuva-jb-chandran
YouTube: / @thuvajbchandran
About Song
இந்தப் பாடல், சாதாரண மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு அரபு நாடுகளுக்கு வேலைக்காக பயணிக்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களையும், வாழ்க்கை அவர்களுக்கு கற்றுத்தரும் உண்மையான படிப்பினைகளையும் பேசுகிறது. இந்த பாடலை THUVA JB CHANDRAN வரிகள் எழுதி அத்துடன் சொல்லிசையில் பாடி உள்ளார். மற்றும் A RAWSHAN இப்பாடலுக்கு இசை அமைத்து MASTER MIX உம் செய்து உள்ளார்.
This song speaks about the real-life experiences and the true lessons learned by ordinary people who leave their homeland and travel to Arab countries in search of work.
The lyrics and vocals for this song were done by Thuva JB Chandran, while the music composition and master mix were created by A Rawshan.
Music produce & Mix mastered by Anton Rawshan
Rec studio - CV LAKSH
Shots : Rathini Thuvaragan , Krish Steevan , Yohan , Lakshan , Nipun
Sinhala Subtitle - Krish Steevan
Writer/ Performer/ Editor/ Colorist - One man all roles. Thuva JB Chandran
"Just raw! One of a kind." - இதுவே என் அடையாளம்
THUVA JB CHANDRAN | துவா ஆகிய நான். எனக்கென இடம் கிடைக்கும் வரை போராடும் ஒரு இலங்கை தமிழ் சொல்லிசை கலைஞன். பாமரனுக்கும் புரியும் என் வரிகள் வலிகள். என் குரல் உங்கள் மனதில் பதியும் வரை
ஒயாது இந்த அலைகளும்.
Thuva JB Chandran is just raw! one of a kind! A Sri Lankan Tamil rap artist, battling till I find my place.
My words cut deep, reaching every heart, even the ordinary. These waves keep rising, till my voice sinks into your soul.
LYRICS
புள்ளிங்களா என்ன நடப்பு
போலாமா வெளிநாடு?
Thuva JB Chandran
Just Raw One of A Kind
போகப்போறேன் வெளிநாடு யோவ் காத்துவாக்குல பல ஊரு..
போகப்போறேன் வெளிநாடு நான் வரும்போது சூப்பர் ஸ்டாரு..
போகப்போறேன் வெளிநாடு யோவ் காத்துவாக்குல பல ஊரு..
போகப்போறேன் வெளிநாடு தம்பி என்ன சத்தம் அங்க எட்டிப் பாரு..
வட்டிக்கு பணத்தை குட்டியையும் போட விட்டு..
கெத்த காட்ட போறேன் நானும் பாவ பட்ட ஊர விட்டு..
நாள் நேரம் பார்த்து புத்தகத்தையும் எடுத்து
நாலு வித்தை கத்துக்கிட்டு மாமன் போறேன் தங்கச் சிட்டு
ஆட்டு மந்தை போல கண்ணு கொட்டக் கொட்ட பாப்பாங்க..
அக்கம் பக்கம் கேப்பாங்க ஆரத்தி எடுப்பாங்க..
மாமன் பொண்ணு அத்தை பொண்ணு சேர்த்து சோடி தைப்பாங்க
கொஞ்சோம் விட்டா மருமகனே காதுல பூ இந்தாங்க..
வலையில் சிக்கிடுமா? திமிங்கலம் தான்டா!
வேடிக்கை பார்க்கப்போற அண்ணன் படம் தான்!
சம்பவம் செய்யுவேன் நான் திரும்பி வந்தா டா..
மூக்குல விரல் வைக்கும் இந்த சனம் தான்!
கண்ணாலம் கட்டுவேண்டா! வெள்ளக்காரி பார்த்து,
சொந்தமா வீடு பூமி சொத்து சுகம் சேர்த்து!
அப்போ நான் கிளம்புறேன் கதைய நிப்பாட்டு,
பத்தரம் வீட்ட பூட்டி கடைய நீ சாத்து..!
போகப்போறேன் வெளிநாடு யோவ் காத்துவாக்குல பல ஊரு..
போகப்போறேன் வெளிநாடு நான் வரும்போது சூப்பர் ஸ்டாரு..
போகப்போறேன் வெளிநாடு யோவ் காத்துவாக்குல பல ஊரு..
போகப்போறேன் வெளிநாடு தம்பி என்ன சத்தம் அங்க எட்டிப் பாரு..
வந்து பார்த்தா! இங்க சுடு காடு..
சொந்த நாடே சிங்கப்பூரு தான்டா என்னக் கேடு..
நல்ல மாட்டுக்கு அம்மா ஒரு சூடு நான் ஊருக்கு ஓட செய்யப்போறேன் ஏற்பாடு!
ஆரம்பமே! கண்ணி வெடியா??
என்ன பண்ண? காலம் போகப் போக பழகிடும் யா!
"என்ட பொன்னே "
பட்ட கஷ்டத்துக்கு பரிசு பதக்கம் ஏது??
வட்டிப் பணம் மண்டையில கொட்டும் போது..
மூட்டபூச்சி தூக்கம் போச்சி, நொந்து நூலும் ஆச்சு!
ஆக்கிப் போட ஆள் இல்லாம, நாக்கும் செத்துப் போச்சு!
வீட்டுத் தேவை கேட்டு நம்பர் போட்ட சீட்டுக்காசு,
மாரியாத்தா கஷ்டம் தீர பேய வந்து ஓட்டு!
ஒட்டகத்த மேய்க்க வந்து மொட்டை விழுந்தாச்சு,
வாய கட்டி சேர்த்த பணம் வைத்தியத்துக்கு ஆச்சு!
பாதி ஜீவன் பாலைவனத்துல கழிச்சாச்சு,
போதும் சாமி வெளிநாட்டு வாழ்க்கை வெருத்தாச்சு!
போய்ப் பாரு வெளிநாடு டேய்..
புடிக்காம பல பேரு,
போய்ப் பாரு வெளிநாடு யோவ்..
பாவப்பட்டவங்க வரலாறு!
போய்ப் பாரு வெளிநாடு டேய்..
புடிக்காம பல பேரு,
போய்ப் பாரு வெளிநாடு டோய்..
பாவப்பட்டவங்க வரலாறு!
அதாகப்பட்டது இந்த பாடல் அரபு நாடுகளில் சிக்கித் திக்கி திண்டாடும் நம் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்!
Peace out
2 V A
(C) 2026 Thuva JB Chandran, under exclusive license to Rubber Stamp Studios
#tamilrap #thuvajbchandran #tamilsong #polamavelinaadu #srilankantamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: