திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள்
Автор: nathantkr photography
Загружено: 2026-01-25
Просмотров: 91
திருக்கோட்டியூர் எனப்படும் திருகோஷ்டியூர் (ஆங்கிலம்:Thirukoshtiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில்[4] அமைந்துள்ள ஊர் ஆகும். இதன் ஊராட்சி திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது [5]. இவ்வூர் திருப்பத்தூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது
.தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு அருகில் அமைந்துள்ள திருக்கோஷ்டியூர், பழமையான ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோயிலுக்குப் பெயர் பெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலத்தில், இறைவன் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், உறங்கு நிலையிலும் தோன்றும் மூன்று நிலை சன்னதி உள்ளது. மேலும், ராமானுஜர் அதன் உச்சியில் இருந்து புனித அஷ்டாக்ஷர மந்திரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இது பிரபலமானது
பெயர்க்காரணம்
முக்கடவுளரும், தேவர்களும், ரிஷிகளும் கூடி ஹிரண்யகசிபுவைக் கொல்லும் உபாயத்தைக் கண்டறிந்த இடமாக இத்தலம் கருதப்படுகிறது. கோஷ்டி (கூட்டம்) சேர்ந்த இடமாக அமைந்தமையால் இத்தலம் திருக்கோஷ்டியூர் என அழைக்கப் பெற்றது. கூட்டத்தின் முடிவின்படி, மஹாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து ஹிரண்யகசிபுவை அழித்தார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: