திருத்தேரில் வரும் சிலையோ | Thirutheril Varum | P. Susheela,S. P. Balasubrahmanyam | Evergreen Song
Автор: Bravo Musik
Загружено: 2022-12-08
Просмотров: 1746963
Movie : Naan Vazhavaippen
Song : Thirutheril
Star Cast : Sivaji Ganesan,K. R. Vijiya
Singer : P. Susheela,S. P. Balasubrahmanyam
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Kannadasan
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்
மணமேடை வரும் கிளியோ
தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன் மழை தூவுது
ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அரங்கேற்றம்
மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழி கணையோ தரும் தரும் சுகம்
திருத்தேரில் வரும் சிலையோ
செந்தூர கோவிலின் மேளம் இது
ஸ்ருங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் காலம் இது
தேனோடு செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தேவன் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்
மணமேடை வரும் கிளியோ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: